தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு- 3
- சீரகம் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி- சிறிது
- உப்பு- 3/4 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
- உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி cube வடிவில் நறுக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- லேசாக கீறிய பச்சை மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் போகும் வரை வதக்கி, உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும்.
- மசாலா உருளைக்கிழங்கு உடன் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
- சுவையான ஜீரா ஆலூ தயார்.
0 comments:
Post a Comment