தேவையான பொருட்கள் :
- ரவை – 1 கப்
- பால் - 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- அன்னாசிபழம்– 1/2 கப்
- தண்ணீர் – 1 கப்
- முந்திரி-5
- திராட்சை - 5
- நெய் - 6 ஸ்பூன்
- லெமன்கேசரி கலர் -சிறிது
செய்முறை :
- ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
- பின் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரிபருப்பு,திராட்சை போட்டு வறுத்து அதை தனியாக வைத்து கொள்ளவும்.
- அதே கடாயில் சிறிதாக நறுக்கிய அன்னாசிபழம் சேர்த்து வதக்கி ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
- அதே கடாயில் பால், தண்ணீர்,கேசரிகலர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
- பின்னர் கொதித்த உடன் அதில் வறுத்த ரவை,அன்னாசிபழம் போட்டு கிளறவும்.
- கேசரி கெட்டியானதும் இறக்கி, அதன்மேல் வறுத்த முந்திரி, திராட்சை, 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.
0 comments:
Post a Comment