தேவையான பொருட்கள்:
- காளான் - 1 கப்
- குடைமிளகாய் - 1
- வெங்காயம் - 2
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4ஸ்பூன்
- பிரஷ் க்ரீம் - 3 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- வரமிளகாய் - 3
- மல்லி - 2 ஸ்பூன்
- மிளகு-1/2 ஸ்பூன்
- பட்டை-1
- கிராம்பு-2
- சோம்பு-1/4 ஸ்பூன்
- முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
- கடாய் சூடானதும் வருக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,ஆறவைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
- பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
- பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும்.
- அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- நன்கு கொதித்ததும் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- பின் கொத்தமல்லியைத் தூவினால் கடாய் காளான் கிரேவி ரெடி!!!