Pages

Showing posts with label இறால். Show all posts
Showing posts with label இறால். Show all posts

சில்லி இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:
  1. இறால் - அரை கிலோ
  2. பூண்டு - 6 பல்
  3. பச்சை மிளகாய் - 2
  4. மிளகு தூள் - 2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 1
  6. கறிவேப்பிலை - சிறிது
  7. மஞ்சள்தூள் - சிறிது 
  8. எண்ணெய் - 4
  9. உப்பு -1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  2. பின் பொடியாக நறுக்கிய பூண்டு,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும். சில்லி இறால் வறுவல் ரெடி.

இறால் வறுவல்

தேவையான பொருட்கள்:
  1. இறால்- 20
  2. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  3. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்
  5. உப்பு - 3/4 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
  1. முதலில் இறாலில் உப்பு,மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் இறால்  போட்டு  வறுத்து எடுக்கவும்.
  3. அதே எண்ணெயில் கருவேப்பிலை போட்டு வறுத்தெடுத்து இறால் வறுவல் மீது போட்டு பரிமாறவும்.

இறால் தொக்கு

தேவையான பொருட்கள்:
  1. இறால் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 2
  3. பூண்டு - 4 பல்
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  5. தக்காளி -1
  6. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
  7. தனியா தூள்-1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. மிளகு தூள் -1 ஸ்பூன்
  10. உப்பு - 1 ஸ்பூன்
  11. எண்ணெய்-4 ஸ்பூன்
  12. கடுகு-1/4 ஸ்பூன்
  13. சீரகம்-1/4 ஸ்பூன்
  14. கறிவேப்பிலை- சிறிது
  15. கொத்தமல்லி - சிறிது
செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கி சுத்தம் செய்து வைத்த இறால் சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.
  4. இறால் நன்கு வெந்ததும் மிளகுதூள் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.இறால் தொக்கு ரெடி.

இறால் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் :

  1. பாஸ்மதிஅரிசி - 2 கப்
  2. இறால் - 11/2கப்
  3. தக்காளி - 1
  4. வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 4
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
  9. தனியாதூள் - 1 ஸ்பூன்
  10. பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
  11. எண்ணெய் - 4 ஸ்பூன்
  12. நெய் -2 ஸ்பூன்
  13. பட்டை - 1
  14. கிராம்பு - 2
  15. பிரிஞ்சிஇலை - 2
  16. ஏலக்காய் - 2
  17. உப்பு - 2 ஸ்பூன்
  18. புதினா -சிறிது
  19. கொத்தமல்லி - சிறிது
  20. கருவேப்பிலை - சிறிது

செய்முறை :

  1. பாத்திரத்தில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை போட்டு கிளறவும்.
  2. பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அதில் இறால் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் உற்றி வேக விடவும்.
  6. வெந்து எண்ணெய் மேலே வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டுதட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து தம்மில் வைக்கவும்.
  7. 20நிமிடம் களித்து நெய் மேலே உற்றி கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி ரெடி.