Pages

Showing posts with label சிக்கன். Show all posts
Showing posts with label சிக்கன். Show all posts

சிக்கன் ப்ரை


 தேவையான பொருட்கள்: 

  1. சிக்கன் - 1/2 கிலோ 
  2. தயிர் - 1 கப் 
  3. சோள மாவு - 5 ஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள் - 3/4 ஸ்பூன் 
  6. மிளகு தூள் - 3/4 ஸ்பூன் 
  7. முட்டை - 1 
  8. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
  9. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
  10. உப்பு - 3/4 ஸ்பூன் 
  11. கேசரி கலர் - சிறிது 
  12. எண்ணெய் - 2 கப் 
செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு நீரில் சுத்தமாக கழுவி,  ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அத்துடன் தயிர்,சோள மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,கேசரி கலர்,எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிக கொள்ள வேண்டும். 
  2.  அந்த கலவையில்  தண்ணீர் அதிகம் இருந்தால்,  குறைப்பதற்கு அத்துடன் சோளமாவு சேர்த்துக் கொள்ளலாம். 
  3. பின் 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  4. ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 8-10 நிமிடம் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் காரமான சிக்கன் ப்ரை ரெடி!!!


தாபா சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் -1/4 கிலோ
  2. எண்ணெய் - 2 ஸ்பூன்
  3. பட்டர் - 2 ஸ்பூன்
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  5. தக்காளி - 2
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  7. தனியா தூள் - 1 ஸ்பூன்
  8. சீரக தூள் - 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் -1/2 ஸ்பூன்
  10. கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
  11. கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
  12. பூண்டு - 1 ஸ்பூன்
  13. பச்சை மிளகாய் - 2
  14. கொத்தமல்லி -சிறிது
  15. உப்பு - 3/4 ஸ்பூன்
செய்முறை:
  1. பேனில் எண்ணெயும்,பட்டரும் சேர்த்து சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்கும் வரை வதக்கவும். சிவந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
  2. அதே பேனில் மீதமுள்ள எண்ணெயில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் தனியா தூள், சீரக தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து ஒன்றாக கலந்து வைக்கவும்.
  5. தக்காளி நன்கு வதங்கியதும் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை இதில் சேர்த்து கிளறவும். ஒரு கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து,எண்ணெய் பிரிந்து வந்ததும் வதக்கி வைத்துள்ள சிக்கன் துண்டுகள், மீதமுள்ள கலந்த மசாலா மற்றும் தயிர் சேர்த்து கிளறவும்.
  6. எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  7. ஐந்து நிமிடத்திற்கு பிறகு கசூரி மேத்தியை சேர்க்கவும்.
  8. பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கிளறவும். மூடி போட்டு குறைந்த தீயில் வேக விடவும்.
  9. சிக்கன் வெந்ததும் நன்கு வறுத்து எடுக்கவும். பின் அதில்  கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

                                                        சிக்கன் சால்னா

                                                        தேவையான பொருட்கள்:
                                                        1. சிக்கன் - 1/2 கிலோ
                                                        2. வெங்காயம் - 2
                                                        3. தக்காளி - 2
                                                        4. தயிர் - 2 ஸ்பூன்
                                                        5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
                                                        6. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
                                                        7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
                                                        8. மிளகாய்த்தூள் - 1 1/2 ஸ்பூன்
                                                        9. தனியா தூள்-1 ஸ்பூன்
                                                        10. பச்சை மிள்காய் -1
                                                        11. புதினா- சிறிது
                                                        12. கொத்தமல்லி-சிறிது
                                                        13. எண்ணெய் - 3 ஸ்பூன்
                                                        14. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
                                                        15. முந்திரி - 6
                                                        16. உப்பு - 1 ஸ்பூன்
                                                        17. கருவேப்பிலை- சிறிது
                                                        செய்முறை:
                                                        1. சுத்தம் செய்த சிக்கனோடு,சிறிது உப்பு,மஞ்சள் தூள்,தயிர் கலந்து வைக்கவும்.
                                                        2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
                                                        3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
                                                        4. வதங்கியதும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,புதினா,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
                                                        5. பின் பொடியாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
                                                        6. தக்காளி மசிந்ததும் மிளகாய்த்தூள்,தனியா தூள் சேர்த்து வதக்கவும். 
                                                        7. பின் அதில் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி மூடி விடவும்.மூடி போட்டு மிதமான நெருப்பில் 10 நிமிடம் வேக விடவும்.
                                                        8. பின்பு 1 கப் தண்ணீர் அரைத்த தேங்காய் முந்திரி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.சிக்கன் வெந்ததும் சப்பாத்தி,பரோட்டாவுடன் பரிமாறவும்.சிக்கன் சால்னா ரெடி.

                                                        காரைக்குடி சிக்கன் மசாலா

                                                        தேவையான பொருட்கள்: 

                                                        1. சிக்கன் - 1/2 கிலோ 
                                                        2. வெங்காயம் - 1
                                                        3. தக்காளி - 1
                                                        4. பூண்டு - 5 பல் 
                                                        5. உப்பு - 3/4 ஸ்பூன் 
                                                        6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
                                                        7. மிளகு தூள் - 1 ஸ்பூன் 
                                                        8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
                                                        9. தயிர் - 1/2 கப் 
                                                        10. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
                                                        11. தேங்காய் - 2 ஸ்பூ
                                                        12. கசகசா - 1 ஸ்பூன் 
                                                        13. சோம்பு - 1 ஸ்பூன் 
                                                        14. எண்ணெய் -4 ஸ்பூன் 
                                                        15. கிராம்பு - 3 
                                                        16. பட்டை - 1 
                                                        17. ஏலக்காய் - 2 
                                                        18. பிரியாணி இலை - 1 
                                                        19. புதினா - 1 ஸ்பூன்  
                                                        20. கறிவேப்பிலை - சிறிது 
                                                        மசாலா அரைக்க:

                                                        1. இஞ்சி - 1 துண்டு 
                                                        2. பூண்டு - 8பல் 
                                                        3. வெங்காயம் - 2
                                                        4. பச்சை மிளகாய் - 3 
                                                        5. மிளகு - 1/4 ஸ்பூன் 
                                                        6. தனியா  - 1 ஸ்பூன் 
                                                        செய்முறை

                                                        1. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து கொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய் தூள்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 
                                                        2. மசாலா அரைக்க இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய், மிளகு,தனியா,தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
                                                        3. பின் தேங்காய், கசகசா,1/2 ஸ்பூன் சோம்பு மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். 
                                                        4. ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு,பட்டை, ஏலக்காய், சோம்பு,கருவேப்பிலை,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். 
                                                        5. அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ,புதினா சேர்த்து வதக்கவும்.
                                                        6. வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை  சேர்த்து, அதன் பச்சைவாடை போகும் வரை கிளறவும்.
                                                        7. பின் சிறிதாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
                                                        8. பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறவும்.
                                                        9. 10 நிமிடம் பிறகு அரைத்து வாய்த்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் உற்றி சிக்கன் வேகும் வரை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். 
                                                        10. சிக்கனானது நன்கு வெந்ததும் சுவையான காரைக்குடி சிக்கன் மசாலா ரெடி

                                                        பேக்ட் சிக்கன்

                                                        தேவையான பொருட்கள்
                                                        1. சிக்கன் லெக் பீஸ் - 4
                                                        2. தயிர் - அரை கப்
                                                        3. மிளகாய் தூள் - 1ஸ்பூன் 
                                                        4. கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
                                                        5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
                                                        6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
                                                        7. சாட் மசாலா - 1/4 ஸ்பூன
                                                        8. ஃபுட் கலர் - சிறிது
                                                        9. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
                                                        10. எண்ணெய் -2 ஸ்பூன்
                                                        11. லெமன் - 1
                                                        செய்முறை:
                                                        1. ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சாட் மசாலா ,மிளகு தூள்,இஞ்சி பூண்டு பேஸ்ட் , 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து அதில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை பிரட்டி ஊற விடவும்.
                                                        2. சிக்கனை மசாலாவில் 2 மணி நேரம் ஊறவிடவும்.
                                                        3. 220 C’ ல் முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும். 10 நிமிடத்துக்கு ஒரு முறை திருப்பி விடவும். நன்கு வெந்ததும் 2 நிமிடத்திற்கு அவனில் பராயில் வைத்து கிரிஸ்பியாக்கவும்.
                                                        4. பின் சிக்கன் மேல் லெமன் சாரை பிழிந்து பரிமாறவும்.

                                                        செட்டிநாடு வறுத்த சிக்கன்

                                                        தேவையான பொருட்கள்:
                                                        1. சிக்கன் – 1/2 கிலோ
                                                        2. இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
                                                        3. காய்ந்த மிளகாய் – 5
                                                        4. சோம்பு – 1 ஸ்பூன்
                                                        5. பச்சை மிளகாய் – 2
                                                        6. சின்ன வெங்காயம் –10
                                                        7. தக்காளி – 1
                                                        8. கறிவேப்பிலை-சிறிது
                                                        9. கடலை மாவு – 1/2 கப்
                                                        10. தேங்காய்- 1/2 கப்
                                                        11. எண்ணெய்- 5 ஸ்பூன்
                                                        12. உப்பு - 1 ஸ்பூன் 

                                                        செய்முறை:
                                                        1. மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும். 
                                                        2. சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
                                                        3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும். 
                                                        4. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
                                                        5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
                                                        6. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். 
                                                        7. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. 

                                                        ஹக்கா சில்லி சிக்கன்

                                                        photo.JPGதேவையான பொருட்கள்:
                                                        1. சிக்கன் - 6 (wings)
                                                        2. இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
                                                        3. மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
                                                        4. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
                                                        5. சோள மாவு - 3 ஸ்பூன்
                                                        6. சோயா சாஸ் - 1 1/2 ஸ்பூன்
                                                        7. பச்சை மிளகாய் - 3
                                                        8. பூண்டு-2 பல்
                                                        9. கருவேப்பிலை - சிறிது
                                                        10. கொத்தமல்லி-சிறிது
                                                        11. கேசரி கலர் -சிறிது
                                                        12. உப்பு - 1 ஸ்பூன்
                                                        13. எண்ணெய் - 1 கப்

                                                        செய்முறை:
                                                        1. ஒரு பாத்திரத்தில் 2  ஸ்பூன் சோளமாவு,இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,1/2 ஸ்பூன் உப்பு,கேசரி கலர் கலந்து,சிக்கன் துண்டுகளின் மேல் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.
                                                        2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிறுதீயில்  பொன்னிறமாக  வேகும் வரை  பொரித்து எடுக்கவும்.
                                                        3. பின் ஒரு கடாயில் 3 ஸ்பூன்  எண்ணெய்  ஊற்றி  கருவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக  நறுக்கிய  பூண்டு,சோயாசாஸ்,சில்லிசாஸ், உப்பு, 1ஸ்பூன்  சோளமாவு(கார்ன் மாவு), 1/2 தண்ணீர் ஊற்றி கிளறி 1நிமிடம் கொதிக்க விடவும்.
                                                        4. பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவினால் ஹக்கா சில்லி சிக்கன் ரெடி.

                                                        பெப்பர் சிக்கன்

                                                        தேவையான பொருட்கள்:

                                                        1. சிக்கன்-250 கிராம்
                                                        2. கொத்தமல்லி-1 பௌல்
                                                        3. மிளகு-2 ஸ்பூன்
                                                        4. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
                                                        5. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
                                                        6. வெங்காயம்-1
                                                        7. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
                                                        8. உப்பு-1 ஸ்பூன்
                                                        9. எண்ணெய் -4 ஸ்பூன்
                                                        செய்முறை:
                                                        1. கொத்தமல்லி, மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
                                                        2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த கொத்தமல்லி,மிளகு மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
                                                        3. வதங்கியதும் வெங்காயத்தை அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும்.
                                                        4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
                                                        5. வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கி சிக்கன் சேர்த்து வதக்கவும்.
                                                        6. சிக்கன் வதக்கி மூடிபோட்டு வேகவிடவும்.சிக்கனில் வரும் தண்ணீரில் சிக்கன் வெந்துவிடும்.
                                                        7. சிக்கன் முக்கால் பாகம்  வெந்ததும் மூடிதிறந்து நன்கு கிளறவும்.
                                                        8. மசாலாவில் உள்ள  தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவந்ததும் கொத்தமல்லி இலை  தூவி கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி ,பிரியாணியுடன் பரிமாறவும்.

                                                        மலபார் சிக்கன் கறி

                                                        தேவையான பொருட்கள்:
                                                        1. சிக்கன்- 1/2 கிலோ
                                                        2. வெங்காயம் - 1
                                                        3. தக்காளி - 1
                                                        4. பச்சை மிளகாய் - 1
                                                        5. மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
                                                        6. உப்பு-3/4 ஸ்பூன்
                                                        7. கறிவேப்பிலை-சிறிது
                                                        8. கொத்தமல்லி-சிறிது
                                                        9. எண்ணெய் -3 ஸ்பூன்
                                                        10. தேங்காய் பால் - 1 கப்
                                                        11. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்


                                                        வறுத்து அரைக்க

                                                        1. மிளகாய் வற்றல் - 3
                                                        2. மல்லி விதை - 1 ஸ்பூன்
                                                        3. மிளகு - 1 ஸ்பூன்
                                                        4. பட்டை - 1
                                                        5. கிராம்பு - 3
                                                        6. ஏலக்காய் - 2
                                                        செய்முறை :
                                                        1. வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும்.
                                                        2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
                                                        3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
                                                        4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் சிக்கன்  சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
                                                        5. கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
                                                        6. சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
                                                        7. சுவையான மலபார் சிக்கன் கறி தயார்.

                                                        கிரில் சிக்கன்

                                                        தேவையான பொருட்கள்:
                                                        1. சிக்கன்-8(Medium size pieces)
                                                        2. மிளகாய்த்தூள்-1ஸ்பூன்
                                                        3. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
                                                        4. தந்துரிமசாலா-1 1/2 ஸ்பூன்
                                                        5. கேசரி கலர்-சிறிது
                                                        6. உப்பு-1ஸ்பூன்
                                                        7. தயிர்-2 ஸ்பூன்
                                                        8. எண்ணெய்- 2ஸ்பூன்
                                                        செய்முறை:
                                                        1. சிக்கனை சுத்தம் செய்து மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தந்துரிமசாலா,உப்பு , தயிர்,எண்ணெய்,கேசரிகலர் சேர்த்து நன்கு பிசறி 5 மணிநேரம் ஊறவிடவும்.
                                                        2. பின் க்ரில்லரை 350 டிகிரி சூடு செய்து ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு வேகவிடவும்.
                                                        3. வெந்ததும் அதனுடன் கிரில் செய்த வெங்காயம் ,எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.

                                                        செட்டிநாடு சிக்கன் தொக்கு


                                                         தேவையான பொருட்கள்:

                                                        1. சிக்கன் - 1/2 கிலோ
                                                        2. வெங்காயம் - 1
                                                        3. தக்காளி-1
                                                        4. கருவேப்பிலை- சிறிது
                                                        5. உப்பு-1 ஸ்பூன்
                                                        6. எண்ணெய்-5 ஸ்பூன்
                                                        7. கொத்தமல்லி-சிறிது
                                                        வறுத்து அரைக்க:
                                                        1. க.மிளகாய் - 6
                                                        2. தனியா-1 ஸ்பூன்
                                                        3. மிளகு -3/4 ஸ்பூன்
                                                        4. பட்டை-2
                                                        5. கிராம்பு -2
                                                        6. சீரகம்-1/2 ஸ்பூன்
                                                        7. சோம்பு-1/4 ஸ்பூன்
                                                        8. இஞ்சி-சிறிது
                                                        9. பூண்டு-பல்
                                                        செய்முறை:

                                                        1. கடாயில் க.மிளகாய்,தனியா,மிளகு,பட்டை,கிராம்பு,சீரகம்,சோம்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.
                                                        2. ஆறியதும் இஞ்சி,பூண்டு சேர்த்து மிக்ஸ்யில் நன்கு அரைக்கவும்.
                                                        3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                        4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                                        5. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,உப்பு,அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி அதில் சுத்தம்செய்து வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
                                                        6. சிக்கனை மூடிபோட்டு சிறுதீயில் வைத்து வேகவிடவும், சிக்கனில் இருந்தே தண்ணீர் வரும்.
                                                        7. சிக்கன் நன்றாக வெந்ததும்மூடியை திறந்து தொக்கு போல வரும்வரை நன்றாக கிளறவும்.
                                                        8. தொக்கு போல வந்ததும் கொத்தமல்லி தூவி கிளறினால் சுவையான செட்டிநாடு சிக்கன் தொக்கு ரெடி.
                                                        குறிப்பு:

                                                        பொதுவாக, சிக்கன் சமைக்க நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது. நல்லெண்ணெய் சிக்கன் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் ,அது உடல்சூட்டை தணிக்கும்.

                                                        சிக்கன் குருமா

                                                        தேவையான பொருட்கள்:

                                                        1. சிக்கன் - 1/2 கிலோ
                                                        2. வெங்காயம் - 1
                                                        3. தக்காளி -1
                                                        4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
                                                        5. சோம்பு-1/4 ஸ்பூன்
                                                        6. பட்டை-2
                                                        7. கிராம்பு-2
                                                        8. எண்ணெய்-4 ஸ்பூன்
                                                        9. கொத்தமல்லி-சிறிது
                                                        10. தேங்காய் துருவல் -1 கப்
                                                        11. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
                                                        12. தனியாதூள்-1/2 ஸ்பூன்
                                                        13. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
                                                        14. உப்பு-1 ஸ்பூன்
                                                        செய்முறை:

                                                        1. பாத்திரத்தில் எண்ணெய் சூடானதும் பட்டை,கிராம்பு,சோம்பு சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                                        2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
                                                        3. வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
                                                        4. தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
                                                        5. பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.
                                                        6. சிக்கன் பாதி வெந்ததும் அரைத்து வைத்ததேங்காய் பேஸ்ட் சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
                                                        7. சிக்கன் வெந்ததும், கொத்தமல்லி தூவி சாதம்,சாப்பாத்தி, பூரியுடன் பரிமாறவும்.
                                                        குறிப்பு:

                                                        சிக்கன் கிரேவி இன்னும் சுவைகூட்ட8 முந்தரிபருப்பை தேங்காயுடன் சேர்த்து அரைத்து ஊற்றவும்.

                                                        கிரில் தந்தூரி சிக்கன்

                                                        தேவையான பொருட்கள் :



                                                        1. சிக்கன் - 500 கிராம்
                                                        2. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
                                                        3. தந்தூரி மசாலா - 1 1/2 ஸ்பூன்
                                                        4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 /2 ஸ்பூன்
                                                        5. எலுமிச்சை பழம் - 1
                                                        6. தயிர் - 1 ஸ்பூன்
                                                        7. உப்பு -1 ஸ்பூன்
                                                        8. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
                                                        9. எண்ணெய் - 2 ஸ்பூன்
                                                        10. ரெட் கேசரி கலர் - சிறிது

                                                        செய்முறை :

                                                        1. சிக்கன் சுத்தம் செய்து அதில் மிளகாய் தூள் , கரம் மசாலா தூள், தந்தூரி மசாலா, உப்பு ,எண்ணெய், ரெட் கேசரி கலர்,தயிர்  போட்டு பிரட்டி 3 மணி நேரம் ஊறவிடவும்.
                                                        2. பின் ஓவனில் 350 டிகிரியில் வைத்து சிக்கனை கிரில் செய்யவும். 
                                                        3. சிக்கன் வெந்ததும் நீல வாக்கில் வெட்டிய வெங்காயம், எலுமிச்சை பழம், கிரீன் சட்னியுடன் பரிமாறவும்.