Pages

Showing posts with label பொடி. Show all posts
Showing posts with label பொடி. Show all posts

பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு-1 கப்
  2. கடலை பருப்பு-1/2 கப்
  3. க.மிளகாய்-8
  4. பெருங்காயம்-1/4 ஸ்பூன்
  5. மிளகு-1 ஸ்பூன்
  6. உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு சூடானதும் துவரம் பருப்பு போட்டு பொன் நிறமாக வறுக்கவும்.
  2. பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில் கடலைபருப்பு,க.மிளகாய்,மிளகு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  3. நன்கு ஆறியதும் மிக்ஸ்யில் போட்டு அத்துடன் பெருங்காயம்,உப்பு அரைத்து கொள்ளவும். பருப்பு பொடி ரெடி இதை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடவும்.

கருவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்:
  1. கருவேப்பிலை-2 கப்
  2. உள்ளுதம்பருப்பு-1/4 கப்
  3. கடலைபருப்பு-2 ஸ்பூன்
  4. க.மிளகாய்-5
  5. பூண்டு-1 பல்
  6. உப்பு-3/4 ஸ்பூன்


செய்முறை :

  1. கருவேப்பிலை சுத்தம் செய்து ஒரு கடாயில் போட்டு நன்கு வறுத்துகொள்ளவும்.
  2. நன்கு வறுத்ததும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளவும்.பின் அதே கடாயில் உள்ளுதம்பருப்பு,கடலைபருப்பு,க.மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  3. வறுத்ததும் நன்கு ஆறவைத்து கொள்ளவும்.
  4. மிக்ஸ்யில் கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.பின் வறுத்துவைத்த பருப்பு,க.மிளகாய்,உப்பு,பூண்டு சேர்த்து அரைக்கவும்.
  5. கருவேப்பிலை பொடி ரெடி.இட்லி,தோசை,சூடான சாதத்துடன் சாபிடலாம்.