Pages

Showing posts with label snacks. Show all posts
Showing posts with label snacks. Show all posts

ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள்:

  1. ஓட்ஸ் -2 கப்
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன் 
  4. கருவேப்பிலை - சிறிது 
  5. எண்ணெய் -2 ஸ்பூன் 
  6. கடுகு-1/4 ஸ்பூன் 
  7. உளுத்தம்பருப்பு-1 ஸ்பூன் 
  8. கடலைபருப்பு-1 ஸ்பூன்
  9. பச்சைமிளகாய்-2
  10. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன் 
  11. காரட்-1
  12. பீன்ஸ்-5
  13. பச்சைபட்டாணி-1/4 கப் 
  14. உப்பு-1/2 ஸ்பூன் 
  15. தண்ணீர்-1 1/4கப் 
செய்முறை:

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு சேர்த்து பொரிந்ததும், அதில் கருவேப்பிலை,நீளமாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் பொடியாக நறுக்கிய காரட்,பீன்ஸ்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் சிறிது மஞ்சள் தூள்,ஓட்ஸ் உப்பு சேர்த்து நன்கு கிளறி 1 1/4 கப் தண்ணீர் ஊற்றி, தீயை சிறிதில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் கொத்தமல்லி தூவி கிளறினால் ஓட்ஸ் உப்புமா ரெடி.

வெஜிடேபிள் சமோசா


தேவையான பொருட்கள்:
  1. உருளைக்கிழங்கு - 2
  2. பச்சை பட்டாணி - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  4. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. சீரகம்- 1/4 ஸ்பூன்
  7. உப்பு - 3/4 ஸ்பூன் 
  8. மைதா - 2 கப் 
  9. எண்ணெய் - 3 கப்
  10. தண்ணீர் - 2 கப் 
செய்முறை: 
  1. ஒரு பெரிய பௌலில் மைதா, 1/4 ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும். 
  2. பின் அதனை ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிட வேண்டும். 
  3. பின்னர் ஒரு பௌலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி போட்டு, நன்கு ஒன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். 
  4. பின்பு ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய்  ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் நீளமாக வேட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் அதில் உப்பு, கரம் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை போட்டு கிளறவும்.
  6. ஊற வைத்துள்ள மைதா மாவை, சிறு உருண்டைகளாக உருட்டி,அதை வட்ட வடிவில் தேய்த்து கொள்ளவும். பின் அதை அரைவட்டமாக வெட்டி ,அதனை கூம்பு வடிவில் செய்து, அதன் நடுவே, பிசைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து மூடி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  7. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சமோசாக்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  8. சுவையான வெஜிடேபிள் சமோசா ரெடி.தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.




முந்தரி பகோடா

தேவையான பொருட்கள்:
  1. முந்திரி - 1 கப் 
  2. கடலை மாவு - 1/2 கப் 
  3. அரிசி மாவு - 2 டீஸ்பூன் 
  4. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
  5. நெய் - 2 டீஸ்பூன் 
  6. உப்பு - 1/2 ஸ்பூன் 
  7. எண்ணெய் - தேவையான அளவு 
செய்முறை: 
  1. முதலில் முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், நெய் ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து, பேஸ்ட் போல் சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். 
  3. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் முந்திரியை, கலந்து வைத்துள்ள கலவையில் நனைத்து, எண்ணெயில்  போட்டு  பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முந்திரி பகோடா ரெடி!!!

செட்டிநாடு வறுத்த சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் – 1/2 கிலோ
  2. இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 2
  3. காய்ந்த மிளகாய் – 5
  4. சோம்பு – 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் – 2
  6. சின்ன வெங்காயம் –10
  7. தக்காளி – 1
  8. கறிவேப்பிலை-சிறிது
  9. கடலை மாவு – 1/2 கப்
  10. தேங்காய்- 1/2 கப்
  11. எண்ணெய்- 5 ஸ்பூன்
  12. உப்பு - 1 ஸ்பூன் 

செய்முறை:
  1. மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவைத்து நன்றாக அரைக்கவும். 
  2. சின்ன துண்டுகளாக வெட்டிவைத்த சிக்கனுடன்அரைத்துவிழுது,இஞ்சி பூண்டு பேஸ்ட், எண்ணெய் ஒரு ஸ்பூன்,உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள்,உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்தால் சற்று மொறு மொறுப்பாக ஆகும். 
  4. கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
  5. மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். 
  6. வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி உப்பு சேர்த்து வதக்கவும். 
  7. இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. 

ரிப்பன் பகோடா




    தேவையான பொருட்கள்:                                                                   

    1. கடலைமாவு - 2 கப்
    2. அரிசி மாவு - 1 கப்
    3. மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
    4. பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்
    5. எண்ணெய் -பொரிக்க
    6. உப்பு - 1 ஸ்பூன்

    செய்முறை :



    1. கடலைமாவையும், அரிசிமாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்தூள், பெருங்காயப்பொடி, உப்பு, 3 ஸ்பூன் சூடான எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பிசையவும்.



    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவினை அச்சில் வைத்து, பிழிந்து வெந்தவுடன் எடுக்கவும்.ரிப்பன் பகோடா ரெடி.

    ஹக்கா சில்லி சிக்கன்

    photo.JPGதேவையான பொருட்கள்:
    1. சிக்கன் - 6 (wings)
    2. இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
    3. மிளகாய்தூள்- 1 ஸ்பூன்
    4. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
    5. சோள மாவு - 3 ஸ்பூன்
    6. சோயா சாஸ் - 1 1/2 ஸ்பூன்
    7. பச்சை மிளகாய் - 3
    8. பூண்டு-2 பல்
    9. கருவேப்பிலை - சிறிது
    10. கொத்தமல்லி-சிறிது
    11. கேசரி கலர் -சிறிது
    12. உப்பு - 1 ஸ்பூன்
    13. எண்ணெய் - 1 கப்

    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில் 2  ஸ்பூன் சோளமாவு,இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,1/2 ஸ்பூன் உப்பு,கேசரி கலர் கலந்து,சிக்கன் துண்டுகளின் மேல் தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.
    2. பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிறுதீயில்  பொன்னிறமாக  வேகும் வரை  பொரித்து எடுக்கவும்.
    3. பின் ஒரு கடாயில் 3 ஸ்பூன்  எண்ணெய்  ஊற்றி  கருவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக  நறுக்கிய  பூண்டு,சோயாசாஸ்,சில்லிசாஸ், உப்பு, 1ஸ்பூன்  சோளமாவு(கார்ன் மாவு), 1/2 தண்ணீர் ஊற்றி கிளறி 1நிமிடம் கொதிக்க விடவும்.
    4. பின் அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவினால் ஹக்கா சில்லி சிக்கன் ரெடி.

    பிரட் உதாப்பம்

    தேவையான பொருட்கள்:
    1. பிரட்- 6 துண்டு
    2. ரவை-1 கப்
    3. தயிர்-1 கப்
    4. வெங்காயம்-1
    5. பச்சை மிளகாய்-4
    6. காரட்-1
    7. கொடைமிளகாய்-1
    8. உப்பு-3/4 ஸ்பூன்
    9. கொத்தமல்லி-சிறிது
    10. எண்ணெய் -3 ஸ்பூன்
    செய்முறை:
    1.  பாத்திரத்தில் ரவை,தயிர் சேர்த்து நன்கு கிளறி 1 மணிநேரம் மூடிவைக்கவும்.
    2. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,துருவிய காரட்,துருவிய கொடைமிளகாய்,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
    3. அடுப்பில் ஒரு தவாவை வைத்து சூடானதும் ஒரு பிரட் துண்டை எடுத்து அதில் ரெடி பண்ணி வைத்துள்ள பேஸ்டை ஒரு ஸ்பூனால்  இருபக்கமும் தடவி தவாவில் சப்பாத்தி போல வேகவைத்து எடுக்கவும். 
    4. உதாப்பம் வேகும் போது சிறிது எண்ணெய் ஊற்றி இரு பக்கமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் பிரட் உதாப்பம் ரெடி.

    குவாக்கமொலே

    தேவையான பொருட்கள்:


    1. அவகாடோ -2


    2. எலுமிச்சை சாரு - 3 ஸ்பூன்


    3. உப்பு - 1 ஸ்பூன்


    4. பச்சைமிளகாய்-2


    5. வெங்காயம் - 1


    6. தக்காளி - 1


    7. கொத்தமல்லி இலை - சிறிது


    8. பூண்டு - 3 பல்
    செய்முறை:


    1. அவகாடோவை பாதியாக நறுக்கி உள்ளே இருக்கும் கொட்டையை எடுத்து விட்டு ஒரு ஸ்பூன் கொண்டு ஸ்கூப் செய்து வைக்கவும்.


    2. பின் அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.


    3. பொடியாக வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.


    4. கடைசியாக  எலுமிச்சை சாரு சேர்த்து கிளறி ஒரு மணி நேரம் fridge ல்  வைத்து  பரிமாறவும்.குவாக்கமொலே ரெடி இதை சிப்ஸ் உடன் பரிமாறவும்.