Pages

Showing posts with label Lunch Box. Show all posts
Showing posts with label Lunch Box. Show all posts

ஸ்பினச் சப்பாத்தி

ஸ்பினச் (பசலை கீரை) ஆண்டியாக்ஸிடண்ட்கள் கொண்ட கீரை.பசலை கீரை வைட்டமின் A , வைட்டமின் C, வைட்டமின் E, வைட்டமின் கே, மெக்னீசியம், ஃபோலேட், இரும்பு, விட்டமின் B2, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் B6, ஃபோலிக் அமிலம், தாமிரம், புரதம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு முக்கியமான சத்துகளை கொண்டது.இப்படி நிறைய சத்துகளை கொண்ட கீரைகளை நாம் தினமும் உணவில் சேர்க்க ஸ்பினச் சப்பாத்தி ஒரு வகை.

தேவையான பொருட்கள் :

  1. கோதுமைமாவு-2 கப்
  2. உப்பு-3/4 ஸ்பூன்
  3. ஸ்பினச்( பசலை கீரை)-1 கப்
செய்முறை:
  1. முதலில் ஸ்பினச் வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு,உப்பு,அரைத்து வைத்த ஸ்பினச், தண்ணீர் சேர்த்து நன்கு மாவை பிசைந்துகொள்ளவும்.
  3. 30 நிமிடம் கழித்து சப்பாத்தி மாவை தேவையான வடிவில் இடவும்.
  4. பின் தவாவை சூடாக்கி சப்பாத்தி போட்டு ரெண்டு பக்கமும் நன்கு வேக விட்டு எடுக்கவும்.
  5. ஸ்பினச் சப்பாத்தி ரெடி.

மிளகு சாதம்

தேவையான பொருட்கள் :


  1. வெங்காயம் - 1
  2. பச்சைமிளகாய் - 2
  3. கருவேப்பிலை - சிறிது
  4. கடுகு - 1/4 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு -1/2 ஸ்பூன்
  6. மிளகுதூள் - 1/2 ஸ்பூன்
  7. சாதம் - 2 கப்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. உப்பு - 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 3 ஸ்பூன்

செய்முறை :

  1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள்,மிளகுதூள் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  3. பின் வடித்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறினால் சுவையான மிளகு சாதம் ரெடி.

கொடமிளகாய் சாதம்


செய்முறை :

கொடமிளகாய் - 4
முந்தரி பருப்பு - 8
கருவேப்பில்லை - சிறிது
கடுகு - ½ ஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
க.மிளகாய்- 3
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்

அரைக்க தேவையானவை:

கடலை பருப்பு - 3 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
பட்டை- 1
முழு தனியா (அ) தனியா தூள் - 2 ஸ்பூன்
சீரகம் - ½ ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
வேர்கடலை- 1 ஸ்பூன்
க.மிளகாய்- 6


செய்முறை :
  1. முதலில் வறுத்து அரைக்க வேண்டியவை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து கொள்ளவும்.ஆறியதும் மிக்ஸ்யில் அரைத்து வைத்து கொள்ளவும் .
  2. பாஸ்மதி அரிசி வடித்து நன்றாக ஆறவைத்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, க.மிளகாய், கருவேப்பில்லை, முந்தரி பருப்பு போட்டு பொன்னிறமாக மாறிய பின் அதில் வெட்டி வைத்த கொடமிளகாய் போட்டு வதக்கவும்.
  4. கொடமிளகாய் வேகும்வரி வதக்கி அடுப்பை சிறு தீயில் வைத்து ,அதில் மஞ்சள் தூள்,அரைத்து வைத்த மசாலா தூளை,உப்பையும் போட்டு நன்கு கிளறவும்.
  5. பின்பு அதில் ஆறவைத்த சாதத்தை போட்டு கிளறி கொத்தமல்லி இலை தூவி சுவையான கொடமிளகாய் சாதம் ரெடி.




எலுமிச்சை சாதம்


தேவையான பொருட்கள் :
  1. எலுமிச்சை பழம் - 2
  2. சாதம் - 2 கப்
  3. காய்ந்த மிளகாய் - 4
  4. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  5. உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
  6. வேர்க்கடலை - 1ஸ்பூன்
  7. கடுகு - 1/2ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
  9. கறிவேப்பிலை - சிறியது
  10. எண்ணெய் - 3ஸ்பூன்
  11. உப்பு - 1ஸ்பூன்
செய்முறை :
  1. முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  3. பின்பு அதில் எலுமிச்சை சாறு , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  4. நன்கு கொதித்ததும் ஆறிய சாதத்தை போட்டு கிளறவும்.
  5. உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

புளியோதரை

தேவையான பொருட்கள்:

  1. சாதம் - 2 கப்
  2. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  3. கருவேப்பில்லை- சிறிது
  4. உப்பு - 2 ஸ்பூன்
  5. புளி - 1 கப் கரைத்தது
  6. வேர்கடலை -1 ஸ்பூன்
  7. கடுகு - 1/4 ஸ்பூன்
  8. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  9. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  10. எண்ணெய் - 4 ஸ்பூன்
வறுத்து அரைக்க :
  1. சீரகம் - 1/2 ஸ்பூன்
  2. கடலை பருப்பு - 2 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
  4. மிளகு - 1/2 ஸ்பூன்
  5. தனியா - 1/2 ஸ்பூன்
  6. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  7. க.மிளகாய் - 8

செய்முறை: 
  1. வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை எண்ணெய் விடாமல் வறுத்து ஆறவிடவும். ஆறியதும் பொடியாகி கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கடலை பருப்பு கருவேப்பில்லை, க.மிளகாய், வேர்கடலை சேர்த்து பொரிந்ததும்அதில் கரைத்த புளி தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  3. நன்கு கொதித்ததும் அரைத்த பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  4. பின் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

வாங்கி பாத்

தேவையான பொருட்கள் :


  1. எண்ணெய் - 2 ஸ்பூன்
  2. கடுகு - 1 ஸ்பூன்
  3. பெருங்காயம் - சிறிதளவு
  4. கறிவேப்பிலை - சிறிது
  5. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
  6. கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்
  7. நீளமான பச்சை கத்தரிக்காய் - 250 கிராம்
  8. வடித்த சாதம் - 3 கப்
  9. உப்பு - 1 ஸ்பூன்
 
வறுத்து அரைக்க:

  1. சீரகம் - 1 ஸ்பூன்
  2. பட்டை -2
  3. கிராம்பு -2
  4. எள்ளு - 2 ஸ்பூன்
  5. கசகசா -1 ஸ்பூன்
  6. தனியா - 2 ஸ்பூன்
  7. காய்ந்த மிளகாய் - 4
  8. உளுத்தம் பருப்பு -1 ஸ்பூன்
  9. கடலை பருப்பு -1 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

செய்முறை : 

  1. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயம், கறிவேப்பிலை, உளுந்து, கடலை பருப்பு.
  3. அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
  4. கத்தரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
  5. ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.


கேரட் சாதம்

தேவையான பொருட்கள் :
  1. துருவிய கேரட் - ஒரு கப்
  2. பச்சை மிளகாய் -3
  3. வெங்காயம் - 1
  4. கறிவேப்பிலை - சிறிது 
  5. கடுகு - 1/2 ஸ்பூன்

  6. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  7. உப்பு - 1 ஸ்பூன்
  8. வடித்தசாதம் - 3 கப்
 செய்முறை :



  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு பொரிந்ததும்.
  2. அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி அதில் துருவிய கேரட்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வெந்ததும் சாதம்,கொத்தமல்லி தூவி கிளறவும்.

தக்காளி சாதம்

 தேவையான பொருட்கள் :
  1. தக்காளி - 2
  2. வெங்காயம் -1
  3. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

  4. தனியா தூள் -1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  6. உப்பு - 1 ஸ்பூன்
  7. எண்ணெய் - 3 ஸ்பூன்

  8. பச்சை மிளகாய் - 2
  9. கடுகு - 1 ஸ்பூன்
  10. உள்ளுதம்பருப்பு - 1/4 ஸ்பூன்
  11. கடலைபருப்பு - 1/4 ஸ்பூன்
  12. சீரகம் - 1/4 ஸ்பூன்

  13. பூண்டு - 4
  14. சாதம் - 2 கப்

செய்முறை:
  1. முதலில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, உள்ளுதமப்ருப்பு,கடலை பருப்பு, சீரகம் போட்டு பொரிந்ததும். அதில் பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி அதில் அரை கப் தண்ணீர் உற்றி பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
  4. அதனுடன் வடித்த சாதத்தை போட்டு கிளறவும்.