Pages

Showing posts with label சட்னி. Show all posts
Showing posts with label சட்னி. Show all posts

தேங்காய் தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:


  1. துருவிய தேங்காய் - 1/2 கப் 
  2. தக்காளி - 2
  3. வெங்காயம் - 1
  4. கடலைபருப்பு - 2 ஸ்பூன் 
  5. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
  6. கடுகு - 1 ஸ்பூன் 
  7. இஞ்சி - 1 துண்டு 
  8. பூண்டு - 3 பல் 
  9. காய்ந்த மிளகாய் - 3
  10. கறிவேப்பிலை - சிறிது 
  11. எண்ணெய் - 3 ஸ்பூன் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்

செய்முறை: 

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வருக்க  வேண்டும். பின் அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், வெங்காயம் சேர்த்துவதக்கவும் 
  2. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. பின் துருவி வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து விடவும்.
  4. நன்கு ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ள வேண்டும். 
  5. பின் கடாயில்  2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும்.சுவையான தேங்காய் தக்காளி சட்னி தயார்.


கத்திரிக்காய் சட்னி

தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய் - 2
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பச்சை மிளகாய் - 2
  5. கடுகு - சிறிது 
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  8. மல்லித் தூள் - 1/4 ஸ்பூன் 
  9. உப்பு - 1/2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி - சிறிது 
  11. எண்ணெய் - 2 ஸ்பூன் 
செய்முறை :
  1. கூகேரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  2. பின் நறுக்கிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனிய தூள்,உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விடவும்.
  4. கூக்கரை திறந்து தண்ணீரை வடித்துவிட்டு கத்தரிக்காயை நன்கு மசித்துவிட்டு வடித்த தண்ணீரை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
  5. கத்திரிக்காய் சட்னி ரெடி .கொத்தமல்லி தூவி பரிமாறவும். இட்லி,தோசையுடன் நன்றாக இருக்கும்.


தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:
  1. தக்காளி - 1
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3 பல்
  4. கொத்தமல்லி -1/2 கப்
  5. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்
  6. கடலை பருப்பு - 1 ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
  8. க.மிளகாய்- 3
  9. புளி - சிறிது
தாளிக்க:
  1. கடுகு - ஸ்பூன்
  2. சீரகம் - ஸ்பூன்
  3. கறிவேப்பிலை - சிறிது
  4. பெருங்காயம் - சிறிது
  5. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:

  1. கடாய் வைத்து சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு, க.மிளகாய் போட்டு சிவக்க வறுக்கவும்.
  2. அதனுடன் தேங்காய் துருவல் மற்றும் புளி போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
  4. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
  5. தக்காளி வதங்கியவுடன் கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. இந்த கலவை ஆறியவுடன் முதலில் அரைத்த கலவையுடன் சேர்ந்து அரைத்துக் கொள்ளவும்.
  7. கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.
  8. சுவையான தக்காளி சட்னி தயார். இது சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.

ஸ்வீட் புளி சட்னி


தேவையான பொருட்கள்:
  1. புளி - 1 (லெமன் அளவு)
  2. வெல்லம் - 1/2 கப்
  3. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  4. சீரக தூள் - 1/4 ஸ்பூன்
  5. உப்பு - 1/4 ஸ்பூன்

செய்முறை :
  1. புளியை முதலில் 1 கப் சுடு தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிடவும்.
  2. ஒரு பாத்திரத்தில் புளி கரைச்சல், வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  3. 5 நிமிடம் கொதித்ததும் மிளகாய்த்தூள், சீரக தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் கொதிக்கவிடவும். அது நன்கு கொதித்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். ஸ்வீட் புளி சட்னி ரெடி. இதை எல்லா சாட் உணவுடன் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு :

இந்த புலி சட்னி Fridge ல் வைத்து ஒரு மாதம் வரை சாபிடலாம்.

சாட் கிரீன் சட்னி

தேவையான பொருட்கள் :
  1. கொத்தமல்லி - 1 கப்
  2. புதினா - 1/2 கப்
  3. தேங்காய் துருவல் - 1/2 கப்
  4. பச்சைமிளகாய் - 2
  5. லெமன் ஜூஸ் - 2 ஸ்பூன்
  6. உப்பு - 1/2 ஸ்பூன்
  7. சக்கரை - 1/2 ஸ்பூன்

செய்முறை :

  1. புதினா, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், உப்பு, சக்கரை,தேங்காய் துருவல்,லெமன் ஜூஸ்,தண்ணீர் சேர்த்து மிக்ஸ்யில் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. சாட் கிரீன் சட்னி ரெடி. சாட் உணவுடன் பரிமாறவும்.


அவகாடோ சட்னி

             அவகாடோ(Butter fruit) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B6 உள்ளன. அவகாடோ கெட்டகொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்றவை தடுக்க இயலும். 


 
தேவையான பொருட்கள் :

  1. அவகாடோ - 1
  2. இஞ்சி - சிறிது
  3. பச்சை மிளகாய் - 3
  4. லெமன்ஜூஸ் - 1 / 2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 1
  6. உப்பு - 1 / 2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி - 1/2 கப்

தாளிக்க

  1. எண்ணெய் - 1 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  4. கருவேப்பிலை - சிறிது

செய்முறை

  1. பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கியதும் கொத்தமல்லி, அவகாடோ சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் சூடாறியதும் லெமன்ஜூஸ், உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சட்னியுடன் சேர்த்து கலக்கி சப்பாத்தி, தோசை, இட்லியுடன் பரிமாறவும்.

குறிப்பு :

அவகாடோவை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி ஒரு ஸ்பூன் கொண்டு உள்ளிருக்கும் காயை எடுக்கவும். 

கடலைபருப்பு சட்னி


தேவையான பொருட்கள் :

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  4. இஞ்சி - சிறிது
  5. க.மிளகாய் - 2
  6. பச்சை மிளகாய் - 2
  7. பெருங்காயம் - சிறிது
  8. கடலைபருப்பு - 1/2 கப்
  9. எண்ணெய்- 3 ஸ்பூன்
  10. கடுகு - 1/4 ஸ்பூன்
  11. உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
  12. கருவேப்பிலை - சிறிது
  13. கொத்தமல்லி - சிறிது
  14. உப்பு - 1/2 ஸ்பூன்


செய்முறை :

  1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடலை பருப்பு, க.மிளகாய் , பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  2. பின் அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  3. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் எடுத்து அரைத்து வைத்த சட்னியில் சேர்க்கவும்.
  6. சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி.சப்பாத்தி , இட்லி , தோசையுடன் பரிமாறவும்.
குறிப்பு :
  1. புளிப்பாக இருக்கவேண்டும் என்றால் சிறிது புளி வைத்து அரைத்து கொள்ளவும் .