Pages

Showing posts with label மில்க் ஷேக். Show all posts
Showing posts with label மில்க் ஷேக். Show all posts

ஆப்பிள் மில்க் ஷேக்


ஆய்வுகள் ஆப்பிள் இரத்த கொழுப்பு குறைக்க உதவும் என்று கூறுகிறது.ஆப்பிள் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள உதவுதோடு மேலும் நோய் எதிராக பாதுகாப்புகளை மேம்படுத்துவதில் உதவுகிறது.


தேவையான பொருட்கள்:
  1. ஆப்பிள்- 1
  2. சக்கரை - 2 ஸ்பூன்
  3. பால் - 2 கப்
  4. ஐஸ் கட்டி - 10

செய்முறை :
  1. மிக்ஸ்யில் தோல்,கொட்டை நீக்கிய ஆப்பிள்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. ஆப்பிள் மில்க் ஷேக் ரெடி.


குறிப்பு :


விரும்பினால் எல்லா மில்க் ஷேக்களில் 2 ஸ்பூன் வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்த்து அடித்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

கிர்ணிபழம் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:
  1. கிர்ணிபழம்(cantaloupe) - 1 கப்
  2. சக்கரை - 3 ஸ்பூன்
  3. பால் - 2 கப்
  4. ஐஸ் கட்டி - 10

செய்முறை :
  1. மிக்ஸ்யில் தோல்,கொட்டை நீக்கிய கிர்ணிபழம்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. கிர்ணிபழம் மில்க் ஷேக் ரெடி.
குறிப்பு:

கிர்ணிபழம் உடல் சூட்டை தணிக்கும்,அதனால் வெயில் காலத்திற்கு ஏற்ற மில்க் ஷேக்.

மாம்பழ மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்:

  1. மாம்பழம் - 1
  2. சக்கரை - 1/4 கப்
  3. பால் - 2 கப்
  4. ஐஸ் கட்டி - 10

செய்முறை :

  1. மிக்ஸ்யில் மாம்பழம்,சக்கரை,பால்,ஐஸ் கட்டி சேர்த்து நன்கு அரைக்கவும்.
  2. மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

மாதுளை மில்க் ஷேக்

தேவையான பொருட்கள் :
  1. மாதுளம்பழம்- 1
  2. பால்-1 கப்
  3. சக்கரை -1/2 கப்
  4. ஐஸ் கியுப்- 10

செய்முறை:
  1. மாதுளைபழத்தை தோல் உரித்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.
  2. மாதுளைவிதைகளை மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் பால் சேர்த்து அரைக்கவும்.
  3. பின் சக்கரை,ஐஸ் சேர்த்து நன்றாக மிக்ஸ்யில் 2 நிமிடம் நன்கு அரைக்கவும்.
  4. சுவையான மாதுளை மில்க் ஷேக் ரெடி.
குறிப்பு :

மிக்ஸ்யில் ஜூஸ் extractor ல் போட்டு அரைத்தால் வடிகட்டும் வேலை எளிது.

அவகாடோ மில்க் ஷேக்

  அவகாடோ(Butter fruit) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B6 உள்ளன. அவகாடோ கெட்டகொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்றவை தடுக்க இயலும்.

தேவையான பொருட்கள் :

  1. அவகாடோ- 1
  2. பால் - 2 கப்
  3. தண்ணீர் - 1 கப்
  4. சக்கரை - 4 ஸ்பூன்

செய்முறை :

  1. நன்கு பழுத்த அவகாடோ பாதியாக வெட்டி கொட்டையை நீக்கி ஒரு ஸ்பூன் வைத்து பழத்தை எடுக்கவும்.
  2. மிக்ஸ்யில் அவகாடோ, பால், தண்ணீர், சக்கரை சேர்த்து நன்கு அடித்து குடிக்கவும்.