Pages

Showing posts with label மீன். Show all posts
Showing posts with label மீன். Show all posts

மீன் தொக்கு

தேவையான பொருட்கள் :
  1. மீன் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  5. மிளகு தூள் - 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  7. தனியா தூள் - 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. கருவேப்பிலை-சிறிது
  10. கொத்தமல்லி- சிறிது
  11. உப்பு- 1 ஸ்பூன்
  12. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. இஞ்சிபூண்டு பச்சை வாசம் போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. தண்ணீர் 1 கப் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போக கொதிக்க விட்டு, மீன் துண்டு சேர்த்து வேகவிடவும்.
  6. நன்றாக மீன் வெந்து,மசாலா தொக்கு போலானதும் கொத்தமல்லி தூவி  இறக்கிவிடவும்.
குறிப்பு :

மீனை திருப்பும் போது மீன் துண்டுகள் உடையாமல் பொருமையாக திருப்பவும்.

க்ரீன் ஃபிஷ் கறி


தேவையான பொருட்கள் :


  1. மீன் - 300 கிராம்
  2. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  3. உப்பு - 2ஸ்பூன்
  4. வெங்காயம் - 1
  5. மிளகாய் - 5
  6. பூண்டு - 2 பல்
  7. தேங்காய் துருவல் - 2ஸ்பூன்
  8. முந்திரிபருப்பு - 6
  9. எண்ணெய் - 4ஸ்பூன்
  10. சீரகம் - 1/4ஸ்பூன்
  11. சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
  12. தனியாத்தூள் - 1/2ஸ்பூன்
  13. பெருஞ்சீரகத்தூள் - 1/2ஸ்பூன்
  14. தயிர் - 1/4 கப்
  15. தண்ணீர் - 1 கப்
  16. கொத்தமல்லி இலை- சிறிது


செய்முறை :
  1. மீனை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை போட்டு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து 15 நிமிடம் வைத்திருக்கவும்.
  3. மிக்ஸியில் வெங்காயம், பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி இலை, முந்திரி, தேங்காய், பூண்டு, மல்லித் தூள், சீரகம், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  5. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் விழுதினை போட்டு நன்கு வதக்கவும்.
  6. அதன் பிறகு சிறிது தண்ணீர் மற்றும் மல்லி இலை சேர்த்து கொதிக்க விடவும். அதில் தயிரை ஊற்றி கலக்கி விடவும்.
  7. ஊற வைத்திருக்கும் மீனை இந்த கலவையில் போட்டு பிரட்டி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
  8. அடுப்பின் தீயை மிதமாக வைத்து மீன் வேகும் வரை மூடி வைத்திருக்கவும்.
  9. 10 நிமிடம் கழித்து மீன் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  10. சுவையான க்ரீன் ஃபிஷ் கறி ரெடி.இதனை சப்பாத்தி, ஃப்ரைட் ரைஸ் உடன் பரிமாறலாம்.

மீன் குழம்பு


தேவையான பொருட்கள் :  

எண்ணெய்-4 ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
வெங்காயம் - 1
பூண்டு-4
கடுகு- 1/4 ஸ்பூன்
வெந்தயம்-1/4ஸ்பூன்
சீரகம் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
புளி கரைசல் - 1 கப்
பச்சை மிளகாய் - 2
உப்பு - 2 ஸ்பூன்


அரைக்க தேவையானவை :

வெங்காயம் - 1
தக்காளி-1

செய்முறை
  1. முதலில் வெங்காயம், தக்காளி நன்றாக மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாய் வைத்து அதில் 4 எண்ணெய் ஸ்பூன் சேர்த்து காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சீரகம் போடவும்.
  3. பொரிந்ததும் சிறியதாக வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அதில் அரைத்து வைத்ததை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
  5. அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. நன்கு கொதித்ததும் சுத்தம் செய்து வைத்த மீன் துண்டுகளை போட்டு கொதிக்கவிடவும்.
  7. மீன் வெந்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.

மீன் பிரியாணி

தேவையான பொருட்கள் :


  1. பெரிய மீன் -6 துண்டுகள்
  2. பாசுமதி அரிசி - 3 கப்
  3. வெங்காயம் -2
  4. தக்காளி -1
  5. பச்சைமிளகாய்-2
  6. கொத்தமல்லி - சிறிது
  7. புதினா - சிறிது
  8. இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
  9. மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
  10. தனியாதூள் -3 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
  12. பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
  13. எண்ணெய் - 6 ஸ்பூன்
  14. பட்டை - 2

  15. கிராம்பு - 2
  16. ஏலக்காய் - 2
  17. பிரியாணி இலை - 2
  18. உப்பு - 3 ஸ்பூன்


செய்முறை :


  1. முதலில் ஒரு பாத்தரத்தில் மிளகாய் தூள் , தனியா தூள் - 1 ஸ்பூன்,மஞ்சள்  தூள் - 1/2 ஸ்பூன், இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1/2 ஸ்பூன்,உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் உறவிடவும்.
  2. பின்பு அதை 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு மீன்களை வறுத்து எடுக்கவும்.
  3. பின் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் உற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை போட்டு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் தக்காளி போட்டு வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,தனியா தூள்,மஞ்சள் தூள்,பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும். பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. 10 நிமிடம் களித்து அதில் வருத்த மீன் துண்டுகளை போட்டு, மீன் உடையாமல் கிளறி விடவும்.
  7. பின் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை போட்டு காற்று போகாத மூடி போட்டு மூடிவைக்கவும்.
  8. தம் முறையில் அரை மணி நேரம் பிறகு மீன் உடையாமல் கிளறவும்.

குறிப்பு :

தம் முறை : ஒரு தவா சூடு பண்ணி அதை சிறிய தீயில் வைத்து அதன் மேல் மூடிய பிரியாணி பாத்திரத்தை வைக்கவும்.

மீன் ரோஸ்ட்

தேவையான பொருட்கள்:

  1. மீன் - 4 துண்டுகள்
  2. இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  5. தனியாதூள் - 1 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  7. எண்ணெய் - 3 ஸ்பூன்
  8. உப்பு - 1 ஸ்பூன்


செய்முறை :

  1. ஒரு பாத்திரத்தில் மீனை தவிர அனைத்து பொருட்களை சேர்த்து நன்கு பிசையவும்.
  2. மீன் துண்டுகளை, பிசைந்து வைத்திருக்கும் மசாலா கலவையில் நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பின்பு ஒரு தவாவில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை போட்டு சிறு தீயில் வருத்து எடுக்கவும்.