Pages

Showing posts with label முட்டை. Show all posts
Showing posts with label முட்டை. Show all posts

மலபார் எக் கறி

தேவையான பொருட்கள்:


    1. முட்டை - 3
    2. வெங்காயம் - 1
    3. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
    4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    5. மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    7. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    8. தேங்காய் பால் - 2 கப்
    9. எண்ணெய் - 3 ஸ்பூன்
    10. கடுகு-1/4 ஸ்பூன்
    11. சீரகம் - 1/4 ஸ்பூன்
    12. கறிவேப்பிலை-சிறிது
    13. உப்பு- 3/4 ஸ்பூன்
    செய்முறை:
    1. முட்டை வேகவைத்து பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
    2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,நீளவாக்கில் மெலிசாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    5. மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்பால் சேர்த்து கொதிவர ஆரம்பித்ததும் முட்டை போட்டு மசாலாவை இறக்கவும்.
    6. கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.  

    முட்டை மசாலா

    தேவையான பொருட்கள்:
    1. முட்டை-3
    2. வெங்காயம்-1
    3. தக்காளி-1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    7. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    8. உப்பு-3/4 ஸ்பூன்
    9. எண்ணெய் -3 ஸ்பூன்
    10. கருவேப்பிலை-சிறிது
    11. கடுகு-1/4 ஸ்பூன்
    12. உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
    13. கொத்தமல்லி-சிறிது
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    3. பின் வெட்டிவைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. தக்காளி மசிந்ததும் மஞ்சள்தூள்,மிள்கைதூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
    5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் முட்டை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மசாலாவில் போடவும்.
    6. பின் அதை மூடி வைத்து வேகவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்து முட்டை உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி  சப்பாத்தி,சாதத்துடன் பரிமாறவும்.

    முட்டை கோஸ் பொடிமாஸ்


    தேவையான பொருட்கள்:

    1. கோஸ்-2 கப்
    2. வெங்காயம்-1
    3. கடுகு-1/4ஸ்பூன்
    4. உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
    5. கடலைபருப்பு-1/2ஸ்பூன்
    6. சீரகம்-1/4ஸ்பூன்
    7. முட்டை-2
    8. உப்பு-1/2ஸ்பூன்
    9. எண்ணெய்-2ஸ்பூன்
    10. கொத்தமல்லி-சிறிது
    11. கருவேப்பிலை-சிறிது
    வறுத்து அரைக்க:
    1. க.மிளகாய்-3
    2. உள்ளுதம்பருப்பு-1 ஸ்பூன்
    செய்முறை:
    1. கடாயில் க.மிளகாய்,உள்ளுதம்பருப்பு சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.
    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
    4. பாதி வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள்,பொடித்த பொடி சேர்த்து வதக்கவும்.
    5. அதில் முட்டை சேர்த்து வதக்கவும்.முட்டை நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.முட்டை கோஸ் பொடிமாஸ் ரெடி.

    செட்டிநாடு முட்டை குழம்பு


    தேவையான பொருட்கள்:
    1. முட்டை - 4 ( வேகவைத்தது)
    2. வெங்காயம் - 1
    3. தக்காளி - 1
    4. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
    5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    6. உப்பு - 1 ஸ்பூன்
    7. கடுகு - 1/4 ஸ்பூன்
    8. சீரகம் -1/4 ஸ்பூன்
    9. கொத்தமல்லி - சிறிது
    10. கருவேப்பிலை - சிறிது

      வறுத்து அரைக்க:
      1. எண்ணேய் - 1 ஸ்பூன்
      2. தனியா- 2ஸ்பூன்
      3. க.மிளகாய் - 3
      4. பூண்டு - 4 பல்
      5. இஞ்சி -சிறியது
      6. மிளகு - 1 ஸ்பூன்
      7. சீரகம் - 1 ஸ்பூன்
      8. தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
      9. கருவேப்பிலை - சிறிது
      செய்முறை :

      1. ஒரு சிறிய கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் தேங்காய் தவிர வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுக்கவும்.
      2. வறுத்தெடுத்த அனைத்தையும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
      3. ஒரு கடாயில்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும்.
      4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
      5. தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
      6. கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி சப்பாத்தி, பரோடா உடன் சாப்பிடவும்.


    • குறிப்பு :
    • தனியா, க.மிளகாய் பதிலாக மிளகாய் தூள், தனியா தூள் போட்டு அரைத்து கொள்ளவும்.




        முட்டை ஆம்லேட்

        தேவையான பொருட்கள் :


        1. முட்டை - 2
        2. வெங்காயம் -1

        3. பச்சை மிளகாய் - 1

        4. மஞ்சள் தூள் - சிறிது

        5. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
        6. உப்பு - சிறிது
        7. எண்ணெய் - 1 ஸ்பூன்

        செய்முறை :

        1. கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
        2. வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
        3. முட்டை நன்கு அடித்து அதில் வதக்கிய வெங்காயத்தை போட்டு கலக்கவும்.
        4. தவாவில் சிறிது எண்ணெய் தேய்த்து அதில் முட்டை கலவையை தோசை போல உற்றவும். சிறிது எண்ணெய் தோசையில் உற்றுவது போல உற்றி திருப்பி போடவும்.
        5. வெந்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.