Pages

Showing posts with label ஸ்வீட். Show all posts
Showing posts with label ஸ்வீட். Show all posts

கோதுமை அல்வா

                          

தேவையான பொருட்கள் :
  1. கோதுமைமாவு - 1/2 கப்
  2. சர்க்கரை - 1 கப்
  3. தண்ணீர் -2 கப் 
  4. நெய் - 5 ஸ்பூன்
  5. ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன் 
  6. முந்திரி பருப்பு - 5
  7. கேசரி கலர் பொடி - சிறிது 

செய்முறை :

  1. கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு சப்பாத்தி மாவை போல பிசைந்து கொள்ளவும்.
  2. பின் அதை சிறிது சூடான தண்ணீரில் போட்டு 5-7 மணி நேரம் ஊறவிடவும்.
  3. கோதுமை கலவையை கலக்கி வடிதட்டில் ஊற்றி திப்பியை எடுத்து விடவும்.
  4. Nonstick பாத்திரத்தில் சக்கரை, 1 கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கிளறவும்.
  5. கோதுமை கலவையின் மேல் தெளிந்து இருக்கும் தண்ணீரை முடிந்தவரை எடுத்து விடவும்.
  6. சக்கரை பாகு போல வந்ததும் கேசரி கலர்,கலந்து வைத்த கோதுமை கலவையை சேர்த்து கிளறவும்.
  7. பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
  8. நெய் பிரிந்து வந்ததும் வறுத்து வைத்த முந்தரி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறினால் கோதுமை அல்வா ரெடி.

ஸ்வீட் போளி

தேவையான பொருட்கள்:
  1. மைதா -1 கப்
  2. கோதுமைமாவு-1/4கப்
  3. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  4. உப்பு-சிறிது
  5. நெய்-6 ஸ்பூன்
பூரணம் செய்ய:
  1. கடலைபருப்பு-1கப்
  2. வெல்லம்-1/2கப்
  3. ஏலக்காய்-2
செய்முறை:

  1. மைதா,கோதுமைமாவு,உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசையவும். பின் அதை 30 நிமிடம் ஊறவிடவும்.
  2. கூகேரில் கடலைபருப்பு 2 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் விடவும்.
  3. தண்ணீர் முழுதும் வடித்து கடலைபருப்பு,வெள்ளம்,ஏலக்காய் சேர்த்து மிக்ஸ்யில் ஒரு சுற்று சுற்றி கொரகொரப்பாக அரைக்கவும்.
  4. ஒரு கவரில் நெய் தடவி பிசைந்து வைத்து உள்ள மாவில் ஒரு உருண்டை எடுத்து சிறியதாக தட்டி கொள்ளவும்.
  5. பின் அதன் நடுவில் பூரணத்தை வைத்து நன்கு மூடி உருண்டையாக செய்து கொள்ளவும்.
  6. பின் கையில் நெய் தடவி நன்கு மெலிதாக வரும் வரை தட்டி கொள்ளவும்.
  7. அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் செய்து வைத்துள்ள போளி போட்டு சிறிது நெய் ஊற்றி ரெண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

அன்னாசிபழம் கேசரி

தேவையான பொருட்கள் :
  1. ரவை – 1 கப்
  2. பால் - 1 கப்
  3. சர்க்கரை – 1 கப்
  4. அன்னாசிபழம்– 1/2 கப்
  5. தண்ணீர் – 1 கப்
  6. முந்திரி-5
  7. திராட்சை - 5
  8. நெய் - 6 ஸ்பூன்
  9. லெமன்கேசரி கலர் -சிறிது
செய்முறை :
  1. ஒரு கடாயில் சிறிதளவு நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.
  2. பின் சிறிது நெய் ஊற்றி அதில் முந்திரிபருப்பு,திராட்சை போட்டு வறுத்து அதை தனியாக வைத்து கொள்ளவும்.
  3. அதே கடாயில் சிறிதாக நறுக்கிய அன்னாசிபழம் சேர்த்து வதக்கி ஒரு கப்பில் எடுத்து கொள்ளவும்.
  4. அதே கடாயில் பால், தண்ணீர்,கேசரிகலர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. பின்னர் கொதித்த உடன் அதில் வறுத்த ரவை,அன்னாசிபழம் போட்டு கிளறவும்.
  6. கேசரி கெட்டியானதும் இறக்கி, அதன்மேல் வறுத்த முந்திரி, திராட்சை, 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.

ரவா லட்டு

தேவையான பொருட்கள்:

  1. ரவை -1 கப்
  2. நெய் – 5 ஸ்பூன்
  3. சர்க்கரை - 1/2 கப்
  4. ஏலக்காய்பொடி- 1/4 ஸ்பூன்
  5. திராட்சை- 10
  6. முந்திரி - 10
  7. பால் - 1/4 கப்
செய்முறை:
  1. கடாயில் நெய்யை ஊற்றி சூடானதும் அதில் முந்திரி திராட்சையை போட்டு வறுத்து தனியே எடுத்துவைக்கவும்.
  2. அதே நெய்யில் ரவையை போட்டு நன்றாக வறுத்துகொள்ளவும்.ரவை பச்சை வாடை போகும் வரை வறுக்கவும்.
  3. ரவையில் வறுத்த முந்திரி திராட்சை, ஏலக்காய் பொடி, பொடித்த சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  4. இதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.
  5. அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சுவையான ரவா லட்டு ரெடி.
குறிப்பு:

உருண்டை பிடிக்கும் அளவுக்கு பால் ஊற்றினால் போதும்.

மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி என்றாலே நம் தமிழ் புத்தாண்டு தாங்கா எனக்கு ஞாபகம் வரும். எங்க அம்மா மாங்காய் பச்சடிக்கும் நம் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு சொல்வாங்க என்ன தெரியுமா உங்களுக்கு ? மாங்காய் பச்சடியில சேர்த்து சமைக்கற புளிப்பு தரும் மாங்காய், இனிப்பு தரும் வெல்லம்,காரம் தரும் மிளகாய்த்தூள்,துவர்ப்பு தரும் வேப்பம்பூ,கரிப்பு தரும் உப்பு போல நம் வாழ்கையிலும் சந்தோசம்,துக்கம் எல்லாம் கலந்து இருக்குமாம் அதை பிள்ளைங்களுக்கு சொல்றதுக்கு தான் தமிழ் புத்தாண்டுக்கு பச்சடி செஞ்சு நாம கொண்டாடறோம்.

தேவையான பொருட்கள் :
  1. மாங்காய் - 3 கப்
  2. வெல்லம் - 1 கப்
  3. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
  4. உப்பு-1/4 ஸ்பூன்
  5. வேப்பம்பூ - 1/4 ஸ்பூன்
  6. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
  7. எண்ணெய்-1 ஸ்பூன்
  8. கடுகு- 1/4 ஸ்பூன்

செய்முறை :
  1. மாங்காய் தோலை சீவி, மெலிதாக வெட்டி கொள்ளவும். பின் அதை பிரஷர் கூகேரில் 1 1/2 கப் தண்ணீர்,உப்பு,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் விடவும்.
  2. பாத்திரத்தில் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
  3. 5 நிமிடம் பிறகு வெல்லம் கெட்டியானதும் வேகவைத்த மாங்காய், வேப்பம்பூசேர்த்து நன்கு கிளறவும்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் மாங்காய் கலவையுடன் சேர்த்து கிளறி பரிமாறவும். 

ரவா கேசரி

தேவையான பொருட்கள் :


  1. ரவை - 1 கப்

  2. சர்க்கரை - 1 கப்

  3. கேசரி கலர் - சிறிது

  4. முந்திரி பருப்பு - 7

  5. உலர்ந்த திராட்சை - 5

  6. ஏலக்காய் - 2

  7. நெய் - 4 ஸ்பூன்


செய்முறை :


  1. முதலில் 1 ஸ்பூன் நெய்யில் ரவையை நன்றாக வறுத்து கொள்ளவும்.
  2. பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அதில் கேசரி கலர், ஏலக்காயை பொடி போடவும்.

  3. கொதித்ததும் ரவையை போட்டு கட்டி படாமல் கிளறவும்.

  4. பின் சக்கரை போட்டு கிளறவும், 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி சிறிது நேரம் சிம்மில் வைத்து கிளறவும்.

  5.  ஒரு கடாயில்1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி,திராட்சை வறுத்து கேசரியில் போட்டு கிளறவும்.சுவையான கேசரி ரெடி.