Pages

Showing posts with label ரசம். Show all posts
Showing posts with label ரசம். Show all posts

லெமன் ரசம்

தேவையான பொருட்கள்:
  1. தக்காளி- 2
  2. எலுமிச்சை -1
  3. பூண்டு - 3 பல்
  4. ரசப் பொடி-1/2 ஸ்பூன்
  5. சீரகம்-1/2 ஸ்பூன்
  6. மிளகு- 1/2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி-சிறிது
  8. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
  9. உப்பு - 3/4 ஸ்பூன்
  10. வேகவைத்த பருப்பு - 1/4 கப்
  11. எண்ணெய்-1ஸ்பூன்
  12. கடுகு -1/4 ஸ்பூன்
  13. காய்ந்த மிளகாய் - 2
  14. கறிவேப்பிலை -சிறிது
  15. பெருங்காயதூள்-சிறிது
செய்முறை:

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும்,சீரகம்,மிளகு,பூண்டுஅரைத்து சேர்த்து வதக்கவும்.
  2. பின் அதில் மசித்துவைத்த தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, ரசபொடி, வேகவைத்த பருப்பு,பெருங்காயதூள் சேர்த்து ஒரு கொதிவிடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சைசாறு வைத்து அதில் ரசத்தை ஊற்றி கலந்து கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.சுவையான லெமன் ரசம் ரெடி.
குறிப்பு:

ரசத்தை அதிக நேரம் கொதிக்க விடகூடாது

தக்காளி ரசம்

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2
சீரகம் - 1/2 ஸ்பூன்
பூண்டு - 2 பல்
மிளகு -1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
க . மிளகாய் - 2
கருவேப்பில்லை - சிறிது
கொத்தமல்லி -சிறிது
மஞ்சள் தூள் -சிறிது
உப்பு - 1 ஸ்பூன்
பெருங்காய தூள் -சிறிது

செய்முறை :

  1. சீரகம், பூண்டு, மிளகு, பச்சை மிளகாய் அனைத்தும் சேர்த்து அரைக்கவும்.
  2. தக்காளி நன்றாக தண்ணீர் சேர்த்து பிழிந்து வைக்கவும்.
  3. ஒரு கடாய் வைத்து எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பில்லை பொரிந்ததும்க.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  4. அத்துடன் அரைத்து வைத்ததை சேர்த்து வதக்கவும்.
  5. பின்பு அதில் கரைத்து வைத்த தக்காளி சாரு சேர்த்து அதில் மஞ்சள் தூள், பெருங்காயதூள், உப்பு சேர்க்கவும்.
  6. கொதி வரும் நிலையில் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


மிளகு ரசம்

தேவையான பொருட்கள் :
  1. தக்காளி - 1
  2. சீரகம்- 1/4 ஸ்பூன்
  3. மிளகு - 1/2ஸ்பூன்
  4. பூண்டு - 3
  5. கடுகு - 1/4ஸ்பூன்
  6. க.மிளகாய் -2
  7. கருவேப்பில்லை -சிறிது
  8. கொத்தமல்லி - சிறிது
  9. புளி கரைசல் - 1/4 கப்
  10. உப்பு - 1 ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  12. பெருங்காய தூள் - சிறிது
  13. எண்ணெய்-1 ஸ்பூன்

செய்முறை:

  1. முதலில் சீரகம், மிளகு, பூண்டு மிக்ஸ்யில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், க.மிளகாய், கருவேப்பில்லை, அரைத்து வைத்ததை போட்டு வதக்கவும்.
  3. பின் அதில் புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து கொதிவரும் வரை காத்திருக்கவும்.
  4. கொதிவரும் நிலையில் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
குறிப்பு : ரசத்தை அதிகம் கொதிக்க விடகூடாது.