Pages

Showing posts with label கறிவகை. Show all posts
Showing posts with label கறிவகை. Show all posts

கடாய் காளான் கிரேவி

தேவையான பொருட்கள்: 

  1. காளான் - 1 கப் 
  2. குடைமிளகாய் - 1
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  7. கரம் மசாலா - 1/4ஸ்பூன் 
  8. பிரஷ் க்ரீம் - 3 ஸ்பூன் 
  9. கொத்தமல்லி - சிறிது 
  10. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  11. உப்பு - 3/4 ஸ்பூன்
 வறுத்து அரைப்பதற்கு:

  1. வரமிளகாய் - 3 
  2. மல்லி - 2 ஸ்பூன் 
  3. மிளகு-1/2 ஸ்பூன் 
  4. பட்டை-1
  5. கிராம்பு-2
  6. சோம்பு-1/4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 
  2. கடாய் சூடானதும் வருக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,ஆறவைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 
  3. பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், கொடமிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
  6. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும். 
  7. அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  8.  நன்கு கொதித்ததும் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  9. பின் கொத்தமல்லியைத் தூவினால் கடாய் காளான் கிரேவி ரெடி!!!

கிரிஸ்பி பிரொக்கோலி

தேவையான பொருட்கள் :

  1. பிரொக்கோலி -1 கப் 
  2. உப்பு - சிறிது 
  3. மிளகு தூள்-1/4 ஸ்பூன் 
  4. பூண்டு-2 பல் 
  5. ஒலிவ்(Olive)எண்ணெய் -1 ஸ்பூன் 
செய்முறை :

  1. பிரொக்கோலி சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  2. பின் அதில் உப்பு, மிளகு தூள்,எண்ணெய் , பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு கிளறவும்.
  3. பின் அதை ஓவனில்(oven) 10 நிமிடம் வைத்து bake செய்து எடுத்தால் கிரிஸ்பி பிரொக்கோலி தயார்.

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்: 

  1. பேபி உருளைக்கிழங்கு - 8
  2. பச்சை மிளகாய் - 2 
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1 
  5. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. மல்லி தூள் - 1 ஸ்பூன் 
  8. கரம் மசாலா - 1 1/4 ஸ்பூன்  
  9. சீரகம் - 1/2 ஸ்பூன் 
  10. உப்பு -1 ஸ்பூன்  
  11. எண்ணெய் - 4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் பேபி உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துகொள்ளவும்  
  2. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
  3. பின் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். 
  4. உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமானதும், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
  5. பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் கருவேப்பிலை, சீரகம் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். 
  6. பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளற வேண்டும். 
  7. பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி.

காளான் மஞ்சூரியன்


 தேவையான பொருட்கள் :
  1. காளான் - 10
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன் 
  3. சோள மாவு - 4 ஸ்பூன் 
  4. மைதா - 2 ஸ்பூன் 
  5. சோயா சாஸ் - 2'ஸ்பூன்
  6. உப்பு - 1ஸ்பூன் 
  7. எண்ணெய் - 2 கப்
  8. வெங்காயம் - 1
  9. சில்லி சாஸ் - 1 ஸ்பூன் 
  10. தக்காளி கெட்சப் - 1 1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு பௌலில் சோள மாவு, மைதா,  1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் சோயா சாஸ், 1/2 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  2. பின்பு காளானை, அந்த கலவையில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும். 
  3. ஒரு கடாய் அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த காளானைப் போட்டு பொன்னிறமாக பொரித்து கொள்ள வேண்டும். 
  4. பிறகு வேறு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், சில்லி சாஸ், உப்பு மற்றும் பொரித்து வைத்துள்ள காளான் துண்டுகளை போட்டு நன்கு மற்றொரு 2 நிமிடம் கிளறி, இறக்கி விட வேண்டும்.சுவையான காளான் மஞ்சூரியன் ரெடி.

Stuffed கத்திரிக்காய்

                                            
தேவையான பொருட்கள்:
  1. கத்தரிக்காய்- 6
  2. வெங்காயம் - 1
  3. இஞ்சி - சிறிது
  4. பூண்டு - 5 பல்
  5. க.மிளகாய் - 5
  6. சோம்பு - 1 ஸ்பூன்
  7. சீரகம்-1/2 ஸ்பூன்
  8. தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
  9. கசகசா- 1/2 ஸ்பூன்
  10. பட்டை - 1
  11. கிராம்பு - 2
  12. எண்ணெய் - 5 ஸ்பூன்
  13. கடுகு - 1/4 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன்
செய்முறை:

  1. வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாயை எண்ணெய் ஊற்றி வதக்கவும்.
  2. அத்துடன் சோம்பு, கசகசா, பட்டை, கிராம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  3. கத்தரிக்காயை சுத்தம் செய்து மேலும் கீழும் சிறிது இடம் விட்டு கீறி அதில் அரைத்த விழுதை வைக்கவும்.
  4. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,கத்தரிக்காயை போட்டு வதக்கி எடுத்தால் ஸ்டஃப்டு கத்தரிக்காய் ரெடி.

பிந்தி மசாலா

தேவையான பொருட்கள்:

  1. வெண்டைக்காய்-250 கிராம்
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  5. சீரகம்-1/2 ஸ்பூன்
  6. கரம்மசாலா-1/4 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  9. தனியாதூள்-1/2 ஸ்பூன்
  10. உப்பு-3/4 ஸ்பூன்
  11. எண்ணெய் -5 ஸ்பூன்
  12. கருவேப்பிலை-சிறிது
  13. கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
  1. 1/2 இன்ச் அளவில் வெண்டைக்காய் வெட்டி கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காய்,சிறிது உப்பு  சேர்த்து வேகும் வரை  வதக்கவும்.
  3. வெண்டைக்காய் வெந்ததும் எடுத்து வைத்து கொண்டு அதே கடாயில்  மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,சீரகம் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் கரம்மசாலா,மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
  7. பின் அதில் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லி தூவி பரிமாறவும், பிந்தி மசாலா ரெடி.

வாழைக்காய் பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
  1. வாழைக்காய் - 1
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
  4. கடலைபருப்பு - 1 ஸ்பூன்
  5. வெங்காயம்-1
  6. பூண்டு-2 பல்
  7. பச்சைமிளகாய்-4
  8. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  9. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை - சிறிது
  11. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
  12. உப்பு-3/4 ஸ்பூன்
  13. எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
  1. வாழைக்காய் தோல் சீவி சிறு சிறு சதுரவடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியதும் வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
  4. வாழைக்காய் பாதி வெந்ததும் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
  5. வாழைக்காய் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி கிளறி பரிமாறவும்.

உருளைக்கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்:

  1. உருளைகிழங்கு -2
  2. கடுகு-1/4 ஸ்பூன்
  3. உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன்
  4. பூண்டு-3 பல்
  5. கருவேப்பிலை-சிறிது
  6. எண்ணெய் -3 ஸ்பூன்
  7. மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
  8. தனியாதூள் -1/2 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  10. உப்பு-3/4 ஸ்பூன்
செய்முறை:
  1. உருளைகிழங்கை தோல் சீவி சின்ன சின்ன சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தட்டிவைத்த பூண்டு,வெட்டிவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  3. பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில்வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.
  4. நன்கு வெந்ததும் கிளறி பரிமாறவும். சுவையான உருளைகிழங்கு வறுவல் ரெடி.

பீன்ஸ் தொக்கு

தேவையான பொருட்கள்:

  1. பீன்ஸ்- 1 bowl (நறுக்கியது)
  2. வெங்காயம்-1
  3. தக்காளி-1
  4. கடுகு-1/4 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
  6. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன்
  8. தனியாதூள்-3/4 ஸ்பூன்
  9. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  10. எண்ணெய் -3 ஸ்பூன்
  11. உப்பு-1/2 ஸ்பூன்
செய்முறை:
  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  3. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  4. 3 நிமிடம் வதக்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சிறு தீயில் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு நன்கு வேகவிடவும்.பீன்ஸ் வெந்ததும் நன்கு கிளறி பரிமாறவும்.

ஜீரா ஆலூ

தேவையான பொருட்கள்:
  1. உருளைகிழங்கு- 3
  2. சீரகம் - 1 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் - 2
  4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  5. தனியா தூள் - 1 ஸ்பூன்
  6. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை- சிறிது
  10. கொத்தமல்லி- சிறிது
  11. உப்பு- 3/4 ஸ்பூன்
  12. எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
  1. உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி cube வடிவில் நறுக்கி வைக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  3. லேசாக கீறிய பச்சை மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் போகும் வரை வதக்கி, உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும்.
  4. மசாலா உருளைக்கிழங்கு உடன் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
  5. சுவையான ஜீரா ஆலூ தயார்.

ப்ராக்கலி வறுவல்

தேவையான பொருட்கள்:

    1. ப்ராக்கலி - 2 கப்
    2. எண்ணெய் - 2 ஸ்பூன்
    3. சீரகம் - 1/2 ஸ்பூன்
    4. பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
    5. பூண்டு - 3 பல்
    6. பச்சை மிளகாய் - 2
    மசாலா தயாரிக்க:

    1. பொட்டுகடலை மாவு - 1/2 கப்
    2. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    3. மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
    4. சீரகத்தூள் - 1/4 ஸ்பூன்
    5. தனியாதூள் - 1/2 ஸ்பூன்
    6. மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
    7. எண்ணெய் - 1 ஸ்பூன்
    8. உப்பு - 1 ஸ்பூன்
    செய்முறை:

                                    1. முதலில் ப்ராக்கலியை சிறிய பூக்களாக நறுக்கி தண்ணீரில் அலசி தண்ணீரை வடித்து விடவும்.
                                    2. ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சைமிளகாயை போட்டு வதக்கவும்.
                                    3. வதங்கியதும் ப்ராக்கலியை போட்டு நன்கு வதக்கி பாதி வேகவிடவும்.
                                    4. ஒரு பாத்திரத்தில் மசாலா தயாரிக்க கொடுத்த பொருள்களை போட்டு 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு ஸ்பூனை வைத்து கிளறவும்.
                                    5. பின் மசாலாக் கலவையை ப்ராக்கலி மீது தூவி விடவும்.நன்கு கிளறி 5 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.பின் கிளறி மொரு மொருவென ஆகும் வரை நன்கு வறுக்கவும்.
                                    6. சுவையான ப்ராக்கலி வறுவல் தயார்.

                                    உருளைக்கிழங்கு பொடிமாஸ்

                                    தேவையான பொருட்கள்:

                                    1. உருளைக்கிழங்கு-2
                                    2. வெங்காயம்-1
                                    3. பச்சைமிளகாய்-2
                                    4. மிளகு-1/2ஸ்பூன்
                                    5. கருவேப்பிலை-சிறிது
                                    6. கடுகு-1/4ஸ்பூன்
                                    7. உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
                                    8. பூண்டு-2 பல்
                                    9. கொத்தமல்லி-சிறிது
                                    10. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
                                    11. உப்பு-3/4ஸ்பூன்
                                    செய்முறை:
                                    1. உருளைகிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
                                    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
                                    3. அதில் தட்டி வைத்த பூண்டு,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கி, மசித்துவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும்.
                                    4. உருளைக்கிழங்கு பொடிமாஸ் ரெடி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

                                    முட்டை கோஸ் பொடிமாஸ்


                                    தேவையான பொருட்கள்:

                                    1. கோஸ்-2 கப்
                                    2. வெங்காயம்-1
                                    3. கடுகு-1/4ஸ்பூன்
                                    4. உள்ளுதம்பருப்பு-1/2ஸ்பூன்
                                    5. கடலைபருப்பு-1/2ஸ்பூன்
                                    6. சீரகம்-1/4ஸ்பூன்
                                    7. முட்டை-2
                                    8. உப்பு-1/2ஸ்பூன்
                                    9. எண்ணெய்-2ஸ்பூன்
                                    10. கொத்தமல்லி-சிறிது
                                    11. கருவேப்பிலை-சிறிது
                                    வறுத்து அரைக்க:
                                    1. க.மிளகாய்-3
                                    2. உள்ளுதம்பருப்பு-1 ஸ்பூன்
                                    செய்முறை:
                                    1. கடாயில் க.மிளகாய்,உள்ளுதம்பருப்பு சேர்த்து வறுத்து பொடித்து கொள்ளவும்.
                                    2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                    3. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
                                    4. பாதி வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள்,பொடித்த பொடி சேர்த்து வதக்கவும்.
                                    5. அதில் முட்டை சேர்த்து வதக்கவும்.முட்டை நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.முட்டை கோஸ் பொடிமாஸ் ரெடி.

                                    வெண்டைக்காய் பொரியல்

                                    தேவையான பொருட்கள்:

                                    1. வெண்டைக்காய் - 250 கிராம்
                                    2. கடுகு- 1/4 ஸ்பூன்
                                    3. உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
                                    4. க.மிளகாய் - 2
                                    5. உப்பு - 3/4 ஸ்பூன்
                                    6. மிளகுதூள் -1/2 ஸ்பூன்
                                    7. எண்ணெய் - 3 ஸ்பூன்
                                    8. பூண்டு-2 பல்
                                    9. வெங்காயம்-1
                                    செய்முறை:
                                    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
                                    2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
                                    3. வெண்டைக்காய் பாதி வெந்ததும் உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
                                    4. மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
                                    குறிப்பு :

                                    வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது மூடி போட்டு வேகவிடவேண்டாம்.

                                    சேப்பங்கிழங்கு வறுவல்

                                    தேவையான பொருட்கள்:

                                    1. சேப்பங்கிழங்கு - 4
                                    2. பூண்டு - 3 பல்
                                    3. கறிவேப்பிலை - சிறிது
                                    4. கடுகு- 1/4 ஸ்பூன்
                                    5. உள்ளுதம்பருப்பு- 1/4 ஸ்பூன்
                                    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
                                    7. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன்
                                    8. தனியா தூள் -3/4ஸ்பூன்
                                    9. மிளகு தூள் -1/2ஸ்பூன்
                                    10. உப்பு - 3/4 ஸ்பூன்
                                    11. எண்ணெய் -3 ஸ்பூன்

                                    செய்முறை:
                                    1. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சேப்பங்கிழங்கை வேக வைக்கவும்.
                                    2. சேப்பங்கிழங்கு தோல் நீக்கிவிட்டு,நறுக்கிவைத்து கொள்ளவும்.
                                    3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,தனியா தூளை சேர்க்கவும்.
                                    4. அதில் தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
                                    5. பின்னர் சேப்பங்கிழங்கு சேர்த்து நன்கு வறுக்கவும்.
                                    6. இதனுடன் உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும்.

                                    கோஸ் பொரியல்


                                    தேவையான பொருட்கள் :
                                    1. கோஸ் - 2 கப்
                                    2. வெங்காயம் - 1
                                    3. எண்ணெய் - 2 ஸ்பூன்
                                    4. கடுகு -1/4 ஸ்பூன்
                                    5. உள்ளுதம் பருப்பு -1/2 ஸ்பூன்
                                    6. கடலைபருப்பு -1/2 ஸ்பூன்
                                    7. கா.மிளகாய் - 3
                                    8. மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
                                    9. உப்பு -1/2 ஸ்பூன்
                                    10. கருவேப்பிலை - சிறிது
                                    செய்முறை :

                                    1. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு, கருவேப்பிலை,க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
                                    2. வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ் சேர்த்து வதக்கவும்.
                                    3. 2 நிமிடம் வதங்கியதும் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து வேகவிடவும்.வேண்டுமென்றால் சிறிது தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

                                    ப்ராக்கலி பொரியல்

                                    ப்ராக்கலி காய் ஒரு முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. பார்க்க பச்சை காலிப்ளவர் போல இருக்கும். ப்ராக்கலி வைட்டமின் C மற்றும் நார்சத்து உள்ள காய். ப்ராக்கலி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டது.


                                    தேவையான பொருட்கள் :

                                    1. ப்ராக்கலி - 1 கப்
                                    2. காய்ந்த‌‌ மிள‌காய் -2
                                    3. கடுகு - 1/4 ஸ்பூன்
                                    4. உளுத்தம்பருப்பு - 1/2ஸ்பூன்
                                    5. சீரகம் - 1/4 ஸ்பூன்
                                    6. வெங்காய‌ம் -1
                                    7. பூண்டு - 2 ப‌ல்
                                    8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
                                    9. சிறு ப‌ருப்பு - 1 /4 கப்
                                    10. தேங்காய் துருவ‌ல் - 2 ஸ்பூன்
                                    11. எண்ணெய்‍- 1 ஸ்பூன்
                                    12. உப்பு - ‍1 /2 ஸ்பூன்

                                    செய்முறை :

                                    1. ஒரு பாத்திரத்தில் சிறு பருப்பு ,தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்
                                    2. கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
                                    3. வெங்காயம் வதங்கியதும் ப்ராக்கலி,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
                                    4. பாதி வெந்ததும் வேகவைத்த தண்ணீர் நீக்கிய சிறுபருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி 2 நிமிடம்  வேகவிடவும்.

                                    குறிப்பு :

                                    சிறுபருப்பு microwave வில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கலாம்.