Pages

Showing posts with label கிரேவி. Show all posts
Showing posts with label கிரேவி. Show all posts

கடாய் காளான் கிரேவி

தேவையான பொருட்கள்: 

  1. காளான் - 1 கப் 
  2. குடைமிளகாய் - 1
  3. வெங்காயம் - 2 
  4. தக்காளி - 1
  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
  7. கரம் மசாலா - 1/4ஸ்பூன் 
  8. பிரஷ் க்ரீம் - 3 ஸ்பூன் 
  9. கொத்தமல்லி - சிறிது 
  10. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  11. உப்பு - 3/4 ஸ்பூன்
 வறுத்து அரைப்பதற்கு:

  1. வரமிளகாய் - 3 
  2. மல்லி - 2 ஸ்பூன் 
  3. மிளகு-1/2 ஸ்பூன் 
  4. பட்டை-1
  5. கிராம்பு-2
  6. சோம்பு-1/4 ஸ்பூன் 
செய்முறை: 

  1. முதலில் காளானை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 
  2. கடாய் சூடானதும் வருக்க கொடுத்த பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து,ஆறவைத்து பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். 
  3. பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், கொடமிளகாய்  சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும்.
  6. பின் அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து வதக்க வேண்டும். 
  7. அதில் சிறிது தண்ணீர், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  8.  நன்கு கொதித்ததும் அதில் பிரஷ் க்ரீம் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 
  9. பின் கொத்தமல்லியைத் தூவினால் கடாய் காளான் கிரேவி ரெடி!!!

காரைக்குடி சிக்கன் மசாலா

தேவையான பொருட்கள்: 

  1. சிக்கன் - 1/2 கிலோ 
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. பூண்டு - 5 பல் 
  5. உப்பு - 3/4 ஸ்பூன் 
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
  7. மிளகு தூள் - 1 ஸ்பூன் 
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  9. தயிர் - 1/2 கப் 
  10. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  11. தேங்காய் - 2 ஸ்பூ
  12. கசகசா - 1 ஸ்பூன் 
  13. சோம்பு - 1 ஸ்பூன் 
  14. எண்ணெய் -4 ஸ்பூன் 
  15. கிராம்பு - 3 
  16. பட்டை - 1 
  17. ஏலக்காய் - 2 
  18. பிரியாணி இலை - 1 
  19. புதினா - 1 ஸ்பூன்  
  20. கறிவேப்பிலை - சிறிது 
மசாலா அரைக்க:

  1. இஞ்சி - 1 துண்டு 
  2. பூண்டு - 8பல் 
  3. வெங்காயம் - 2
  4. பச்சை மிளகாய் - 3 
  5. மிளகு - 1/4 ஸ்பூன் 
  6. தனியா  - 1 ஸ்பூன் 
செய்முறை

  1. முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து கொள்ள வேண்டும். பின் சிக்கனில் மிளகாய் தூள்,மிளகு தூள்,மஞ்சள் தூள்,தயிர்,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி  1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். 
  2. மசாலா அரைக்க இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய், மிளகு,தனியா,தண்ணீர் ஊற்றி கெட்டியான பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும் .
  3. பின் தேங்காய், கசகசா,1/2 ஸ்பூன் சோம்பு மிக்ஸியில் போட்டு, நன்கு மென்மையாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும். 
  4. ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு,பட்டை, ஏலக்காய், சோம்பு,கருவேப்பிலை,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். 
  5. அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ,புதினா சேர்த்து வதக்கவும்.
  6. வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை  சேர்த்து, அதன் பச்சைவாடை போகும் வரை கிளறவும்.
  7. பின் சிறிதாக நறுக்கிய தக்காளி,உப்பு சேர்த்து வதக்கவும்.
  8. பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு கிளறவும்.
  9. 10 நிமிடம் பிறகு அரைத்து வாய்த்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் உற்றி சிக்கன் வேகும் வரை மிதமான தீயில் வைத்து சமைக்கவும். 
  10. சிக்கனானது நன்கு வெந்ததும் சுவையான காரைக்குடி சிக்கன் மசாலா ரெடி

கடாய் பனீர் 2

தேவையான பொருட்கள்:
  1. பன்னீர் - 1 கப் 
  2. வெங்காயம்-1
  3. கொடமிளகாய் - 1
  4. இஞ்சி-சிறிது 
  5. பூண்டு- 2 பல் 
  6. மிளகு-1 ஸ்பூன் 
  7. தனியா - 1 ஸ்பூன் 
  8. மிளகாய்-3
  9. பட்டை-1
  10. கிராம்பு-3
  11. ஏலக்காய்-2
  12. சீரகம்-1/2 ஸ்பூன் 
  13. சோம்பு-1/2 ஸ்பூன்
  14. உப்பு-1 ஸ்பூன் 
  15. மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன் 
  16. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
  17. எண்ணெய் -5 ஸ்பூன்
செய்முறை:
  1. கடாயில் மிளகு,தனியா,மிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம், சோம்பு வறுத்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. தவாவில் 2 ஸ்பூன் எண்ணெய் உற்றி சிறிய பன்னீர் துண்டுகளை போட்டு பொரித்து வைக்கவும்.
  3. கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சதுர வடிவில் வெட்டிவைத்த வெங்காயம்,கொடமிளகாய் சேர்த்து வதக்கவும்,பின் அதில் துருவிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் அரைத்து வாய்த்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
  5. வதங்கியதும் அதில் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து வதக்கி அதில் 1 கப் தண்ணீர் உற்றி கொதிக்கவிடவும்.
  6. பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி பரிமாறவும்.

மீல் மேக்கர் குருமா

தேவையான பொருட்கள் :
  1. மீல் மேக்கர் - 1 கப் 
  2. வெங்காயம் - 1 
  3. தக்காளி - 1
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் 
  5. பச்சை மிளகாய் - 2
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
  7. மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் 
  8. தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
  9. சீரக தூள்  - 1/2 ஸ்பூன் 
  10. கரம் மசாலா - 1/2 ஸ்பூன் 
  11. தேங்காய் பால் - 1/2 கப் 
  12. உப்பு - 3/4 ஸ்பூன்  
  13. எண்ணெய் - 4 ஸ்பூன் 
  14. கொத்தமல்லி - சிறிது 
செய்முறை: 

  1. முதலில் மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
  2. பின்னர் நீரை வடித்து விட்டு, மீல் மேக்கரை பிழிந்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 
  5. பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  6. பின் அதில் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  7. அதில் மீல் மேக்கர், தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.


மலபார் எக் கறி

தேவையான பொருட்கள்:


    1. முட்டை - 3
    2. வெங்காயம் - 1
    3. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
    4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    5. மல்லி தூள் - 3/4 ஸ்பூன்
    6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    7. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    8. தேங்காய் பால் - 2 கப்
    9. எண்ணெய் - 3 ஸ்பூன்
    10. கடுகு-1/4 ஸ்பூன்
    11. சீரகம் - 1/4 ஸ்பூன்
    12. கறிவேப்பிலை-சிறிது
    13. உப்பு- 3/4 ஸ்பூன்
    செய்முறை:
    1. முட்டை வேகவைத்து பாதியாக வெட்டி வைத்து கொள்ளவும்.
    2. கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,நீளவாக்கில் மெலிசாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் மிளகாய்த்தூள்,தனியாதூள்,மஞ்சள்தூள்,கரம் மசாலா,உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
    5. மசாலா நன்கு கொதித்ததும், தேங்காய்பால் சேர்த்து கொதிவர ஆரம்பித்ததும் முட்டை போட்டு மசாலாவை இறக்கவும்.
    6. கொத்தமல்லி இலை தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.  

    வடைகறி

    தேவையான பொருட்கள்:

    1. கடலைபருப்பு-1 கப்
    2. வெங்காயம்-1
    3. தக்காளி-1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. கருவேப்பிலை-சிறிது
    6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    7. தனியாதூள்-3/4 ஸ்பூன்
    8. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
    9. உப்பு-3/4 ஸ்பூன்
    10. கொத்தமல்லி-சிறிது
    11. பட்டை-2
    12. கிராம்பு-2
    13. பிரியாணி இலை -2
    14. சோம்பு-1/4 ஸ்பூன்
    15. எண்ணெய் -4 ஸ்பூன்
    செய்முறை:
    1. கடலைபருப்பு 3 மணி நேரம் ஊறவைத்து, கோர கோர வென தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
    2. பின் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி அதை இட்லி போல இட்லி தட்டில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.
    3. வெந்ததும் ஆறவைத்து உதிர்த்து கொள்ளவும்.
    4. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    6. பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
    7. 3 நிமிடம் கொதித்ததும் உதிர்த்து வைத்து உள்ள கடலைபருப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
    8. கொதித்ததும் நறுக்கி வைத்த கொத்தமல்லி தூவி இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.

    முட்டை மசாலா

    தேவையான பொருட்கள்:
    1. முட்டை-3
    2. வெங்காயம்-1
    3. தக்காளி-1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    6. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    7. தனியாதூள்-1/2 ஸ்பூன்
    8. உப்பு-3/4 ஸ்பூன்
    9. எண்ணெய் -3 ஸ்பூன்
    10. கருவேப்பிலை-சிறிது
    11. கடுகு-1/4 ஸ்பூன்
    12. உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
    13. கொத்தமல்லி-சிறிது
    செய்முறை:
    1. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    3. பின் வெட்டிவைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
    4. தக்காளி மசிந்ததும் மஞ்சள்தூள்,மிள்கைதூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
    5. 5 நிமிடம் நன்கு கொதித்ததும் முட்டை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மசாலாவில் போடவும்.
    6. பின் அதை மூடி வைத்து வேகவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்து முட்டை உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி  சப்பாத்தி,சாதத்துடன் பரிமாறவும்.

    முட்டை குருமா

    தேவையான பொருட்கள்:
    1. முட்டை-3
    2. வெங்காயம்-1
    3. தக்காளி-1
    4. இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
    5. மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
    6. தனியா தூள்-3/4 ஸ்பூன்
    7. மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
    8. உப்பு-3/4 ஸ்பூன்
    9. கருவேப்பிலை-சிறிது
    10. கொத்தமல்லி-சிறிது
    11. பட்டை-2
    12. கிராம்பு-2
    13. பிரிஞ்சி இலை -2
    14. எண்ணெய் -3 ஸ்பூன்
    15. தேங்காய் துருவல்-3/4 கப்
    செய்முறை:
    1. முதலில் முட்டை வேகவைத்து கொள்ளவும்.
    2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
    3. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
    4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
    5. பின் தேங்காய் துருவல் மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
    6. நன்கு கொதித்ததும் வேகவைத்து வெட்டி வைத்த முட்டை, கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.

    வெந்தய கீரை பருப்பு கிரேவி

    வெந்தய கீரைகள் சிறந்த செரிமானம் திறன்களை கொண்ட உணவு.நீங்கள் வெந்தய கீரை சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகள் வராது.வெந்தய கீரை மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

    தேவையான பொருட்கள்:
    1. வெந்தய கீரை - 1கட்டு
    2. துவரம்பருப்பு - 1/2 கப்
    3. சிறுபருப்பு - 1/4 கப்
    4. வெங்காயம்-1
    5. பூண்டு-5 பல்
    6. கடுகு-1/4 ஸ்பூன்
    7. உள்ளுதம்பருப்பு-1/4ஸ்பூன்
    8. மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
    9. பச்சைமிளகாய்-2
    10. க.மிளகாய் - 2
    11. உப்பு-1 ஸ்பூன்
    12. பெருங்காயம் -சிறிது
    13. எண்ணெய் - 2 ஸ்பூன்
    செய்முறை :
    1. முதலில் பருப்பு,கீரை சுத்தம் செய்து கொள்ளவும்.
    2. அதை கூகேரில் போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி,மஞ்சள்தூள்,3பல்பூண்டு, நறுக்கிய பாதி வெங்காயம் ,பச்சைமிளகாய் ,பெருங்காயம்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில்விடவும்.
    3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, க.மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
    4. பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,தட்டி வைத்த பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
    5. கூகர் சூடுஆறியதும் அதை எடுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைத்து கொள்ளவும்.
    6. கடாயில் வெங்காயம் வதங்கியதும் அதை எடுத்து அரைத்து வைத்ததை சேர்த்து கலக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.


    பனீர் பட்டர் மசாலா

    ஹோட்டல் சுவைபோல வீட்டில் எளிதாக பனீர் பட்டர் மசாலா சமைக்கலாம் வாங்க
    தேவையான பொருட்கள் :



    1. பனீர் - 1 கப்
    2. பட்டர் - 1 ஸ்பூன்
    3. எண்ணெய் - 2 ஸ்பூன்
    4. கறிவேப்பிலை - சிறிதளவு
    5. வெங்காயம் -1
    6. தக்காளி - 1
    7. இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
    8. உப்பு - 1 ஸ்பூன்
    9. பால் - 1 கப்
    10. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    11. தனியா தூள் - 1 ஸ்பூன்
    12. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
    13. கசுரி மேத்தி - 1/4 ஸ்பூன்(காய்ந்த வெந்தயகீரை)
    14. தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
    15. கொத்தமல்லி - சிறிதளவு

    செய்முறை:

    1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவேப்பிலை ,சிறிதாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
    2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
    3. பின் அரைத்து வைத்த தக்காளி போட்டு நன்கு வதக்கவும் .
    4. ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா , தக்காளி சாஸ், உப்பு கொஞ்சம் பால் சேர்த்து கட்டி படாமல் கலக்கவும்.
    5. தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் இந்த கலவையை அதில் போட்டு மீதமுள்ள பாலை சேர்த்து கொதிக்கவிடவும்.
    6. பின் அதில் பனீர், கசுரி மேத்தி போட்டு நன்கு கொதிக்கவிடவும். தேவைபட்டாள் சிறிது சிவப்பு கேசரி கலர் சேர்க்கவும்.
    7. இதை சூடான naan, சப்பாத்தி உடன் பரிமாறவும்.