Pages

மஷ்ரூம் குழம்பு

தேவையான பொருட்கள் :


  1. மஷ்ரூம் - 200 கிராம்
  2. எண்ணெய் - 3 ஸ்பூன்
  3. உப்பு -1 ஸ்பூன்

  4. வெங்காயம் - 1
  5. தக்காளி - 1
  6. இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  9. தனியா தூள் - 1 ஸ்பூன்

  10. கரம்மசாலா தூள் -1 /4 ஸ்பூன்

  11. தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

  12. பெப்பர் - 1 ஸ்பூன்

  13. கருவேப்பிலை -சிறிது
  14. கொத்தமல்லி - சிறிது

செய்முறை :


  1. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை,வெங்காயம் போட்டு வதக்கவும்.
  2. வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, அதில் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
  3. பின் சிறு துண்டுகளாக நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து லேசாக வதக்கவும்.

  4. வதங்கியதும் மஞ்சள் தூள் , மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள், கரம் மசாலாத் தூள்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. பிறகு அரைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. அதில் அரைத்த பெப்பர் சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

மிளகு குழம்பு

தேவையான பொருட்கள் :


  1. மிளகு - 2 ஸ்பூன்
  2. சீரகம் - 1 ஸ்பூன்
  3. தனியா - 1ஸ்பூன்
  4. கா .மிளகாய் - 2
  5. புளி -சிறிது
  6. பெருங்காய தூள் - சிறிது
  7. சின்ன வெங்காயம் - 7
  8. பூண்டு - 5 பல்
  9. கருவேப்பிலை -சிறிது
  10. நல்லெண்ணெய் - 7 ஸ்பூன்
  11. கடுகு - 1/4 ஸ்பூன்
  12. உப்பு -1 ஸ்பூன்
செய்முறை :

  1. சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், தனியா, கா.மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சிவக்க வறுக்கவும். 
  2. சூடு ஆறியதும் அரைத்து வைத்து கொள்ளவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் அதில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கி அதில் கரைத்து வைத்த புளி,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 
  5. எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.

மோர் குழம்பு


தேவையான பொருட்கள் :
  1. தயிர் - 1 கப்
  2. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  3. உப்பு - 1 ஸ்பூன்
  4. கருவேப்பில்லை - 4
  5. கொத்தமல்லி - சிறிது

அரைக்க வேண்டியவை :
  1. தேங்காய் - 2 ஸ்பூன்
  2. துவரம் பருப்பு - 1 ஸ்பூன் ( அரைமணி நேரம் உர வைக்கவும் )
  3. மல்லி தூள் - 1 ஸ்பூன்
  4. இஞ்சி - 1 துண்டு
  5. சீரகம் -1 ஸ்பூன்
  6. பச்சை மிளகாய் - 3
தாளிக்க வேண்டியவை :
  1. கடுகு -1/2 ஸ்பூன்
  2. எண்ணெய்-1 ஸ்பூன்
  3. கருவேப்பில்லை - சிறிது

செய்முறை :

  1. எண்ணெய்காய்ந்ததும்கடுகு, கருவேப்பில்லை சேர்க்கவும்.
  2. சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து கடுகு பொரிந்ததும் சேர்த்து கிளறவும்.
  3. பின்பு அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிஷம் கொதிக்க விடவும்.
  4. நன்கு கொதித்ததும் அடுப்பை குறைத்து வைத்து அதனுடன் தயிர், மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து அடித்து வைத்ததை சேர்க்கவும்.
  5. 2 நிமிடம் பிறகு எடுத்து கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
குறிப்பு : நீங்கள் இதனுடன் வெண்டைக்காய் வதக்கி சேர்க்கலாம்.

இட்லி சாம்பார்

தேவையான பொருட்கள் :


  1. துவரம் பருப்பு - 1 கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி -2 சிறியது
  4. பச்சை மிளகாய் -5
  5. பூண்டு -5
  6. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  7. சாம்பார் பொடி- 1 ஸ்பூன்
  8. உப்பு -1 1/2 ஸ்பூன்
  9. பெருங்காய தூள் - சிறிது
  10. எண்ணெய்- 3 ஸ்பூன்
  11. கடுகு - 1/2 ஸ்பூன்
  12. சீரகம் - 1/4 ஸ்பூன்
  13. புளி கரைசல் - 1/4 கப்
  14. கருவேப்பிலை - சிறிது
  15. கொத்தமல்லி - சிறிது
  16. க.மிளகாய் - 2

செய்முறை :

  1. முதலில்குக்கரில் பருப்பு, 1 தக்காளி , பூண்டு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காய தூள், 3 கப் தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 6 whistle விட்டு வேக விடவும் .
  2. பின்பு ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் க.மிளகாய் ,கருவேப்பில்லை,வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
  3. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள்பொடி, சாம்பார்பொடி,புளிகரைசல் சேர்த்து வதக்கி வெந்த பருப்பை போடவும்.
  4. உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு கொத்தமல்லிதூவி இறக்கவும்.சுவையான இட்லி சாம்பார் ரெடி.

கார குழம்பு


தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 1
தக்காளி-1
பூண்டு-5
வெந்தயம் -1/4 ஸ்பூன்
மிளகாய் தூள்-2 ஸ்பூன்
தனியா தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
புளி கரைசல்- 1 கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கருவேப்பில்லை - சிறிது
உப்பு - 1 1/2 ஸ்பூன்

செய்முறை :

  1. எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம் சேர்க்கவும்.
  2. வெந்தயம் பொரிந்ததும் கருவேப்பில்லை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு அதில் மிளகாய் தூள் , தனியா தூள் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து வதக்கி, புளி கரைசல் உற்றி தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. நன்கு கொதித்ததும் எண்ணெய் தனியே மேலேவரும் பொது இறக்கி சாதத்துடன் சாப்பிடவும்.
குறிப்பு :

வெண்டைக்காய் அல்லது கத்திரிக்காய் சேர்த்தும் இந்த குழம்பு செய்யலாம். 

காலிப்ளவர் ட்ரை


தேவையான பொருட்கள்:
  1. காலிஃப்ளவர் - 1
  2. மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்
  3. உப்பு - 1ஸ்பூன்
  4. கார்ன்மாவு - 4 ஸ்பூன்
  5. மைதா - 2 ஸ்பூன்
  6. அரிசிமாவு - 2ஸ்பூன்
  7. கேசரிகலர் - 1 பின்ச்
  8. எண்ணெய் - பொரிக்க

செய்முறை :
  1. காலிப்ளவர் சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. அகலமான பாத்திரத்தில் நீர் விட்டு நன்கு கொதி வந்ததும் காலிஃப்ளவர், உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் மூடி வைக்கவும். (உடனே அடுப்பை அணைத்து விடவும். நன்கு வெந்து விட்டால் க்ரிஸ்பியாக வராது).
  3. வடிதட்டில் நீர் வடிய விடவும். பின் எல்லா மாவையும், மிளகாய் தூள், உப்பு, கேசரி கலர் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவைப்போல கலந்துகொளவும்.
  4. அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து சூடேறியதும் காலிஃப்ளவரை பஜ்ஜி கலவையில் போட்டுஎடுத்து காலிப்ளவரை மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். 






vegetable ஃப்ரை ரைஸ்


தேவையான பொருட்கள்:
  1. பாஸ்மதி அரிசி - 2 கப்
  2. வெங்காயம் - 1
  3. பூண்டு - 3
  4. இஞ்சி - சிறிது
  5. முட்டகோஸ் - 1/2 கப்
  6. கேரட் -1/2 கப்
  7. பீன்ஸ் -1/2 கப்
  8. குடைமிளகாய் -1/2 கப்
  9. பச்சைபட்டாணி - 1/2 கப்
  10. பச்சைமிளகாய் - 3
  11. சோயா சாஸ் - 1 ஸ்பூன்
  12. சில்லி சாஸ் - 1 ஸ்பூன்
  13. எண்ணெய் - 3ஸ்பூன்
  14. உப்பு - 1ஸ்பூன்
  15. மிளகுதூள் -1/2 ஸ்பூன்
  16. வெங்காயதாள் - சிறிது


செய்முறை :



  1. பாஸ்மதி அரிசியை சிறிது உப்பு சேர்த்து வடித்துகொள்ளவும்.
  2. காய்களை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  3. பின் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் உற்றி சிறிதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்.
  4. அதில் பொடியாக நறுக்கிய காய்களை போட்டு வதக்கவும். பாதி வெந்ததும்சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். 
  5. பின் அதில் பாஸ்மதி சாதத்தை சேர்த்து கிளறவும். மிளகு தூள் தூவி நன்கு கிளறவும்.
  6. வெங்காய தாள் தூவி பரிமாறவும்.

இறால் தம் பிரியாணி

தேவையான பொருட்கள் :

  1. பாஸ்மதிஅரிசி - 2 கப்
  2. இறால் - 11/2கப்
  3. தக்காளி - 1
  4. வெங்காயம் - 2
  5. பச்சை மிளகாய் - 4
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் - 11/2 ஸ்பூன்
  9. தனியாதூள் - 1 ஸ்பூன்
  10. பிரியாணி மசாலா - 1 ஸ்பூன்
  11. எண்ணெய் - 4 ஸ்பூன்
  12. நெய் -2 ஸ்பூன்
  13. பட்டை - 1
  14. கிராம்பு - 2
  15. பிரிஞ்சிஇலை - 2
  16. ஏலக்காய் - 2
  17. உப்பு - 2 ஸ்பூன்
  18. புதினா -சிறிது
  19. கொத்தமல்லி - சிறிது
  20. கருவேப்பிலை - சிறிது

செய்முறை :

  1. பாத்திரத்தில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சிஇலை போட்டு கிளறவும்.
  2. பொரிந்ததும் கருவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. நன்கு வதங்கியதும் புதினா,கொத்தமல்லி சேர்த்து வதக்கவும், இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியாதூள், பிரியாணி மசாலா, உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. அதில் இறால் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் உற்றி வேக விடவும்.
  6. வெந்து எண்ணெய் மேலே வந்ததும் வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டுதட்டை வைத்து மூடி மேலே கனமான பொருளை வைத்து தம்மில் வைக்கவும்.
  7. 20நிமிடம் களித்து நெய் மேலே உற்றி கிளறி பரிமாறவும். சுவையான இறால் பிரியாணி ரெடி.

வாழைக்காய் பொரியல்

தேவையான பொருட்கள் :

  1. வாழைக்காய் - 2
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
  4. கடலை பருப்பு -1/4 ஸ்பூன்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. க.மிளகாய் - 3
  7. உப்பு - 1 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
  9. வெங்காயம் - 1
  10. எண்ணெய் - 2 ஸ்பூன்
  11. தேங்காய் துருவல்- சிறிது

செய்முறை :

  1. வாழைக்காயை தோல் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. கடாயில் எண்ணை விட்டு கடுகு,கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சிறிதாக வெட்டிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. வதங்கியதும் வாழைக்காய்,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து சிம்மில் மூடி போட்டு வேகவிடவும்.
  4. வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும், வாழைக்காய் பொரியல் ரெடி.