skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- மட்டன் -1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மஞ்சள்பொடி - 1/2 ஸ்பூன்
- மிளகாய் பொடி -1 1/2 ஸ்பூன்
- தனியா பொடி - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/2ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- உப்பு-1 ஸ்பூன்
- க.மிளகாய்-3
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- மிளகு - 1ஸ்பூன்
- சீரகம் - 1ஸ்பூன்
- சோம்பு - 1ஸ்பூன்
- பட்டை - 2
- கிராம்பு - 1
- தனியா - 1 ஸ்பூன்
- க.மிளகாய்-2
செய்முறை :
- ஒரு குக்கரில் மட்டன் சுத்தம் செய்து சிறிது மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் எண்ணெய், 1 கப் தண்ணீர் உற்றி 6 விசில் விடவும்.
- ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு,பட்டை,கிராம்பு,தனியா, க.மிளகாய் வறுத்து அரைத்துகொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம்,கருவேப்பிலை, க.மிளகாய் சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
- சிறிது வதக்கி பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த மட்டன் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
- தண்ணீர் வற்றி எண்ணெய் மிதந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
- கடலைபருப்பு-1 கப்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- தனியாதூள்-3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- பட்டை-2
- கிராம்பு-2
- பிரியாணி இலை -2
- சோம்பு-1/4 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
- கடலைபருப்பு 3 மணி நேரம் ஊறவைத்து, கோர கோர வென தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
- பின் 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி அதை இட்லி போல இட்லி தட்டில் வைத்து வேகவைத்து கொள்ளவும்.
- வெந்ததும் ஆறவைத்து உதிர்த்து கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, பிரியாணி இலை, சோம்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள், உப்பு சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 3 நிமிடம் கொதித்ததும் உதிர்த்து வைத்து உள்ள கடலைபருப்பு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் நறுக்கி வைத்த கொத்தமல்லி தூவி இட்லி, தோசை,சப்பாத்தியுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- முட்டை-3
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- எண்ணெய் -3 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கடுகு-1/4 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு-1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் வெட்டிவைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி மசிந்ததும் மஞ்சள்தூள்,மிள்கைதூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் 1 நிமிடம் வதக்கி, 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
- 5 நிமிடம் நன்கு கொதித்ததும் முட்டை உடைத்து மஞ்சள்கரு உடையாமல் மசாலாவில் போடவும்.
- பின் அதை மூடி வைத்து வேகவிடவும்.3 நிமிடம் கழித்து திறந்து முட்டை உடையாமல் கிளறி கொத்தமல்லி தூவி சப்பாத்தி,சாதத்துடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 1
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- கடலைபருப்பு - 1 ஸ்பூன்
- வெங்காயம்-1
- பூண்டு-2 பல்
- பச்சைமிளகாய்-4
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- வாழைக்காய் தோல் சீவி சிறு சிறு சதுரவடிவில் வெட்டிக்கொள்ளவும்.
- கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு, கடலைபருப்பு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தட்டி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் வாழைக்காய் சேர்த்து வதக்கவும்.
- வாழைக்காய் பாதி வெந்ததும் மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேகவிடவும்.
- வாழைக்காய் வெந்ததும் தேங்காய் துருவல் தூவி கிளறி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு -2
- கடுகு-1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/4 ஸ்பூன்
- பூண்டு-3 பல்
- கருவேப்பிலை-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- தனியாதூள் -1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
செய்முறை:
- உருளைகிழங்கை தோல் சீவி சின்ன சின்ன சதுர வடிவில் வெட்டிக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தட்டிவைத்த பூண்டு,வெட்டிவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- பாதி வதங்கியதும் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறி சிறு தீயில்வைத்து மூடிபோட்டு வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் கிளறி பரிமாறவும். சுவையான உருளைகிழங்கு வறுவல் ரெடி.
தேவையான பொருட்கள்:
- சிக்கன்-250 கிராம்
- கொத்தமல்லி-1 பௌல்
- மிளகு-2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- வெங்காயம்-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- எண்ணெய் -4 ஸ்பூன்
செய்முறை:
- கொத்தமல்லி, மிளகு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்து வைத்த கொத்தமல்லி,மிளகு மசாலாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
- வதங்கியதும் வெங்காயத்தை அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கி சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- சிக்கன் வதக்கி மூடிபோட்டு வேகவிடவும்.சிக்கனில் வரும் தண்ணீரில் சிக்கன் வெந்துவிடும்.
- சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் மூடிதிறந்து நன்கு கிளறவும்.
- மசாலாவில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்துவந்ததும் கொத்தமல்லி இலை தூவி கிளறினால் சுவையான பெப்பர் சிக்கன் ரெடி ,பிரியாணியுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன்- 1/2 கிலோ
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் -3 ஸ்பூன்
- தேங்காய் பால் - 1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
வறுத்து அரைக்க
- மிளகாய் வற்றல் - 3
- மல்லி விதை - 1 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- பட்டை - 1
- கிராம்பு - 3
- ஏலக்காய் - 2
செய்முறை :
- வறுத்து அரைக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் வறுத்து அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம்,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து வதக்கவும், தக்காளி வதங்கியதும் சிக்கன் சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
- கோழி பாதி வெந்ததும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
- சிக்கன் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதித்து எண்ணெய் பிரியும் போது கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
- சுவையான மலபார் சிக்கன் கறி தயார்.
தேவையான பொருட்கள்:
- பீன்ஸ்- 1 bowl (நறுக்கியது)
- வெங்காயம்-1
- தக்காளி-1
- கடுகு-1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன்
- தனியாதூள்-3/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- எண்ணெய் -3 ஸ்பூன்
- உப்பு-1/2 ஸ்பூன்
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உள்ளுதம்பருப்பு சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
- 3 நிமிடம் வதக்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- சிறு தீயில் வதக்கி 1/2 கப் தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு நன்கு வேகவிடவும்.பீன்ஸ் வெந்ததும் நன்கு கிளறி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- முட்டை-3
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- தனியா தூள்-3/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-3/4 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
- பட்டை-2
- கிராம்பு-2
- பிரிஞ்சி இலை -2
- எண்ணெய் -3 ஸ்பூன்
- தேங்காய் துருவல்-3/4 கப்
செய்முறை:
- முதலில் முட்டை வேகவைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கருவேப்பிலை,பட்டை, கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும், நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,தனியா தூள் ,உப்பு சேர்த்து சிறு தீயில் வதக்கவும்.
- பின் தேங்காய் துருவல் மிக்ஸ்யில் போட்டு நன்கு அரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
- நன்கு கொதித்ததும் வேகவைத்து வெட்டி வைத்த முட்டை, கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:
- சன்னா - 1 கப்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-3/4 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு - 3/4ஸ்பூன்
- கரம்மசாலா- 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- சாட் மசாலா-1/4ஸ்பூன்
- ஸ்வீட் சட்னி- 2 ஸ்பூன்
- கிரீன் சட்னி-2 ஸ்பூன்
- ஒமபொடி -1 கப்
- தயிர்-1/2 கப்
- லெமன் ஜூஸ் -2 ஸ்பூன்
- பட்டர் -2 ஸ்பூன்
செய்முறை:
- சன்னா 6 மணிநேரம் ஊற வைக்கவும்.பின் கூகரில் சன்னா , 2கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் பட்டர் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,தனியாதூள்,உப்பு, கரம்மசாலா சேர்த்து வதக்கவும்.
- 1 நிமிடம் வதக்கி வேக வைத்த சன்னா வேகவைத்த தண்ணியுடன் சேர்த்து கிளறவும்.
- 5 நிமிடம் கொதித்ததும் சாட் மசாலா தூவி கிளறி இறக்கவும்.
- பின் ஒரு தட்டில் முதலில் செய்து வைத்த சன்னா பரிமாறவும்.
- பின் அதன் மேலே 1 ஸ்பூன் தயிர்,ஸ்வீட் சட்னி,கிரீன் சட்னி ,பொடியாக நறுக்கிய வெங்காயம்,சிறிது லெமன் ஜூஸ்,ஓமபோடி, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சூடான சன்னா சாட் தயார்.
தேவையான பொருட்கள்:
- இறால் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2
- பூண்டு - 4 பல்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 ஸ்பூன்
- தக்காளி -1
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- தனியா தூள்-1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
- மிளகு தூள் -1 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- எண்ணெய்-4 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- சீரகம்-1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,உப்பு சேர்த்து வதக்கி சுத்தம் செய்து வைத்த இறால் சேர்த்து வதக்கி 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.
- இறால் நன்கு வெந்ததும் மிளகுதூள் சேர்த்து வதக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.இறால் தொக்கு ரெடி.
தேவையான பொருட்கள்:
- இட்லி அரிசி - 2 கப்
- தேங்காய் - 1/2 கப்
- உப்பு -3/4 ஸ்பூன்
தாளிக்க :
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலைபருப்பு-1/2 ஸ்பூன்
- க.மிளகாய்-5
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கொத்தமல்லி-சிறிது
செய்முறை:
- அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து க்ரைண்டரில் உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு,க.மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- அதில் அரைத்து வைத்திருக்கும் மாவை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
- பின் அதில் பொடியாக நறுக்கி வைத்த தேங்காய்,கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்.
- மிதமான சூட்டில் மாவை ஒன்றாக சேர்த்து பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும்.
- சுவையான உப்பு உருண்டை தயார்.
தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு- 3
- சீரகம் - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிது
- கொத்தமல்லி- சிறிது
- உப்பு- 3/4 ஸ்பூன்
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
- உருளைகிழங்கை வேக வைத்து தோல் நீக்கி cube வடிவில் நறுக்கி வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம்,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- லேசாக கீறிய பச்சை மிளகாய்,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து வாசம் போகும் வரை வதக்கி, உருளைகிழங்கை சேர்த்து வதக்கவும்.
- மசாலா உருளைக்கிழங்கு உடன் நன்றாக ஒட்டியதும் கொத்தமல்லி தூவி எடுக்கவும்.
- சுவையான ஜீரா ஆலூ தயார்.
தேவையான பொருட்கள்:
- மட்டன் - 1 /4 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 1
- கரம் மசாலா - 1 1/2 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-1ஸ்பூன்
- மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
- மிளகுதூள்- 1 ஸ்பூன்
- உப்பு - 3/4 ஸ்பூன்
- எண்ணெய்- 5 ஸ்பூன்
- கடுகு-1/4 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
- முதலில் சின்ன வெங்காயம் , தக்காளியை மிக்ஸ்யில் அரைத்துக்கொள்ளவும்.
- குக்கரில் மட்டன்,கரம்மசாலா,உப்பு,மிளகாய்த்தூள்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில்விடவும்.
- பின் அடுப்பில் கடாய்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம்,தக்காளி பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- நன்கு பச்சை வாடை போகும் வரை வதக்கி,இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து சுருள வதக்கவும். பின் மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி,கொத்தமல்லி தூவி பரிமாறவும்.மட்டன் சுக்கா ரெடி.
தேவையான பொருட்கள்:
- ஆட்டு தலை- 1
- வெங்காயம்-2
- தக்காளி-2
- கறிவேப்பிலை-சிறிது
- பச்சை மிளகாய்-2
- இஞ்சிபூண்டு பேஸ்ட்-3 ஸ்பூன்
- சீரகத்தூள்-1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்-1 ஸ்பூன்
- தனியா தூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
- எண்ணெய்-4 ஸ்பூன்
- பட்டை-1
- ஏலக்காய்-2
- கிராம்பு-2
- உப்பு-1 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- தேங்காய் துருவல்- 1 கப்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, கறிவேப்பிலை,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்,நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- தக்காளியை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
- நன்கு வதங்கியதும் சீரகத்தூள்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2 நிமிடம் வதக்கி,அதனுடன் தலைகறியை சேர்த்து 1 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 5 விசில் விடவும்.
- பின் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- தலைக்கறி கிரேவி தயார் கொத்தமல்லி இலை தூவி இட்லி,தோசை, சாதத்துடன் பரிமாறவும்.