தேவையான பொருட்கள் :
செய்முறை :
குறிப்பு :
மசாலா திக்காக இருக்க 3 ஸ்பூன் வெந்த கொண்டைகடலை எடுத்து மிக்ஸ்யில் அரைத்து சேர்க்கவும்.
- வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் -1
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் துள் - 1/4 ஸ்பூன்
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- எண்ணெய் -3 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- பூண்டு - 3 பல்
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
- கொண்டைக்கடலையை முதல் நாள் இரவு ஊறவைத்து மறுநாள் குக்கரில் மஞ்சள் தூள், உப்பு, அரை தேக்கரண்டி மிளகாய் தூள், மூன்று பல் பூண்டை பொடியாக நறுக்கி போட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
- கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பச்சைமிளகாய்,அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் தக்காளியை அரைத்து சேர்க்கவும். வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு எல்லாம் சேர்ந்து வதங்கியதும் குக்கரில் வேக வைத்த கலவையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
குறிப்பு :
மசாலா திக்காக இருக்க 3 ஸ்பூன் வெந்த கொண்டைகடலை எடுத்து மிக்ஸ்யில் அரைத்து சேர்க்கவும்.
0 comments:
Post a Comment