தேவையான பொருட்கள் :
- வறுத்த ரவை - 1 கப்
- நெய் - 1 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- உள்ளுதம்பருப்பு - 1/2 ஸ்பூன்
- இஞ்சி - சிறிது
- பச்சை மிளகாய் - 1
- கொத்துமல்லி - 1/2 கப்
- வறுத்த முந்திரிபருப்பு - 10
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- தயிர் - 2 கப்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய்,நெய்யை சூடானதும் கடுகு, கடலை பருப்பு,உள்ளுதம்பருப்பு போட்டு பொரிந்ததும்,பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் அதில் ரவை சேர்த்து வதக்கவும்.
- பின்பு ரவை சூடு ஆறியதும் கொத்துமல்லி,மஞ்சள்தூள்,தயிரையும் சேர்த்து பிரட்டி உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.
- இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்ததும் தட்டுகளில் எண்ணெய் தடவி முந்திரிப்பருப்பும் அதன் மேல் ரவா இட்லி மாவினை ஊற்றி வேக விடவும்.
- சுவையான ரவா இட்லி ரெடி.தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
0 comments:
Post a Comment