skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள்:
- முட்டை - 4 ( வேகவைத்தது)
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் -1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- கருவேப்பிலை - சிறிது
வறுத்து அரைக்க:
- எண்ணேய் - 1 ஸ்பூன்
- தனியா- 2ஸ்பூன்
- க.மிளகாய் - 3
- பூண்டு - 4 பல்
- இஞ்சி -சிறியது
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
- ஒரு சிறிய கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் தேங்காய் தவிர வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுக்கவும்.
- வறுத்தெடுத்த அனைத்தையும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- ஒரு கடாயில்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை ,வெங்காயம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி குழய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.கொத்தமல்லி தூவி சப்பாத்தி, பரோடா உடன் சாப்பிடவும்.
குறிப்பு :
தனியா, க.மிளகாய் பதிலாக மிளகாய் தூள், தனியா தூள் போட்டு அரைத்து கொள்ளவும்.
2 comments:
nice recipe... today's trial.. muttai kuzhambu... extremely gud....
Gud gud nalla saptunga ma samachu
Post a Comment