தேவையான பொருட்கள்:
- வெண்டைக்காய் - 15
- கடலைமாவு- 3/4 கப்
- கார்ன் மாவு - 1/4 கப்
- உப்பு - 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய்- பொரிக்க
செய்முறை:
- வெண்டைக்காய் நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் கடலைமாவு,மிளகாய்த்தூள்,கார்ன் மாவு, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
- பின் அதில் வெட்டி வைத்த வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிசறவும்.
- வெண்டைக்காயில் இருக்கும் தண்ணீர் பதத்தில் மசாலா கலவை நன்கு ஒட்டிக்கொள்ளும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் வெண்டைக்காயை போட்டு மொறு மொறுவென ஆகும் வரை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.மொறு மொறு வெண்டைக்காய் பகோடா ரெடி.
0 comments:
Post a Comment