- பீர்கங்காய் - 2
- துவரம்பருப்பு-1/4 கப்
- பாசிபருப்பு-1/2 கப்
- வெங்காயம்-1
- தக்காளி-1
- பச்சைமிளகாய் -2
- இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- சீரகம்- 1/4ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- உப்பு-1/2 ஸ்பூன்
- எண்ணெய்-2 ஸ்பூன்
- கருவேப்பிலை-சிறிது
- கடுகு-1/4 ஸ்பூன்
செய்முறை:
- cooker வைத்து அதில் பாசிபருப்பு,துவரம்பருப்பு, பச்சைமிளகாய், மஞ்சள்தூள்,1 1/2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
- பின் கூகர் திறந்து அதில் தோல் சீவி,கொட்டை நீக்கி வெட்டிவைத்த பீர்கங்காய்,தனியாதூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து 1 விசில் விடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,சீரகம், கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் வேகவைத்ததை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
- பீர்கங்காய் கூட்டு ரெடி.
குறிப்பு:
பீர்கங்காய் தோல் வைத்து துவையல் அரைக்கலாம், அதன் செய்முறை சட்னி பிரிவில் காணலாம்.
0 comments:
Post a Comment