மாங்காய் பச்சடி என்றாலே நம் தமிழ் புத்தாண்டு தாங்கா எனக்கு ஞாபகம் வரும். எங்க அம்மா மாங்காய் பச்சடிக்கும் நம் வாழ்க்கைக்கும் சம்பந்தம் உண்டு சொல்வாங்க என்ன தெரியுமா உங்களுக்கு ? மாங்காய் பச்சடியில சேர்த்து சமைக்கற புளிப்பு தரும் மாங்காய், இனிப்பு தரும் வெல்லம்,காரம் தரும் மிளகாய்த்தூள்,துவர்ப்பு தரும் வேப்பம்பூ,கரிப்பு தரும் உப்பு போல நம் வாழ்கையிலும் சந்தோசம்,துக்கம் எல்லாம் கலந்து இருக்குமாம் அதை பிள்ளைங்களுக்கு சொல்றதுக்கு தான் தமிழ் புத்தாண்டுக்கு பச்சடி செஞ்சு நாம கொண்டாடறோம்.
- மாங்காய் - 3 கப்
- வெல்லம் - 1 கப்
- மிளகாய்த்தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு-1/4 ஸ்பூன்
- வேப்பம்பூ - 1/4 ஸ்பூன்
- மஞ்சள்தூள் -1/4 ஸ்பூன்
- எண்ணெய்-1 ஸ்பூன்
- கடுகு- 1/4 ஸ்பூன்
செய்முறை :
- மாங்காய் தோலை சீவி, மெலிதாக வெட்டி கொள்ளவும். பின் அதை பிரஷர் கூகேரில் 1 1/2 கப் தண்ணீர்,உப்பு,மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து 1 விசில் விடவும்.
- பாத்திரத்தில் வெல்லம், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 5 நிமிடம் பிறகு வெல்லம் கெட்டியானதும் வேகவைத்த மாங்காய், வேப்பம்பூசேர்த்து நன்கு கிளறவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிந்ததும் மாங்காய் கலவையுடன் சேர்த்து கிளறி பரிமாறவும்.
0 comments:
Post a Comment