தேவையான பொருட்கள்:
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- இஞ்சிபூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- பாஸ்மதி அரிசி- 1 1/2 கப்
- பச்சைமிளகாய்- 3
- மிளகாய்த்தூள்- 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா- 1/4 ஸ்பூன்
- பட்டை-2
- கிராம்பு-2
- பிரியாணிஇலை-2
- ஏலக்காய்-2
- கேரட்-1
- பீன்ஸ்-8
- உருளைக்கிழங்கு-1
- பச்சைபட்டாணி -1/2 கப்
- புதினா-1/4 கப்
- கொத்தமல்லி-1/4 கப்
- தயிர்-4 ஸ்பூன்
- எண்ணெய்-4 ஸ்பூன்
- நெய்-1 ஸ்பூன்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணிஇலை சேர்த்து பொரிந்ததும், நீளவாக்கில் வெட்டிவைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் புதினா, கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- அதில் தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் வெட்டி வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.
- காய் பாதி வெந்ததும் மிளகாய்த்தூள்,கரம் மசாலா தூள்,உப்பு சேர்த்து கிளறவும்.
- பின் அதில் தயிர் சேர்த்து வதக்கி,3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.
- கொதிவந்ததும் அதை Electric rice cooker ல் ஊற்றி,நெய்,அரை மணி நேரம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து வேகவிடவும். வெட்ஜ் புலாவ் ரெடி, குருமா அல்லது ரைத்தாவுடன் பரிமாறவும்.
2 comments:
Veg pulav recipe perfect... It was too gud.. The curd part was new and it tasted too gud:)
Thanks ma...
Post a Comment