தேவையான பொருட்கள் :
- சிறிய பூரி - 10
- சன்னா(வேகவைத்தது)- 3 ஸ்பூன்
- தயிர் - 1 கப்
- ஸ்வீட் புளி சட்னி - 3 ஸ்பூன்
- உப்பு - 1/4 ஸ்பூன்
- வேக வைத்த உருளைக்கிழங்கு - 1
- சேவ் - 1 கப்
- சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
செய்முறை :
- பூரிகளை ஒரு பரிமாறும் தட்டில் வைத்து கொள்ளவும்.
- பூரியில் மேலே சிறு ஒட்டையிடவும். பின் உள்ளே சன்னா, உருளைக்கிழங்கு, ஸ்வீட் புளி சட்னி சிறிது, உப்பு சேர்த்து அடித்த தயிர் சேர்க்கவும்.
- பின் அதன் மேலே சேவ்,சிறிது மிளகாய்த்தூள்,சீரகத்தூள்,கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். தஹி பூரி ரெடி.
குறிப்பு :
பூரி வீட்டில் செய்ய முடியாதவர்கள் கடையில் பானி பூரிகாக விற்கும் பூரி வாங்கி செய்யலாம்.
0 comments:
Post a Comment