தேவையான பொருட்கள்:
- டபுள் பீன்ஸ் - 1 கப்
- வெங்காயம் -1
- தக்காளி-1
- இஞ்சி - சிறிது
- பூண்டு -5 பல்
- பட்டை-2
- கிராம்பு-2
- ஏலக்காய் -2
- சோம்பு -1/4ஸ்பூன்
- சீரகம் -1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
- தனியாதூள்-1/2 ஸ்பூன்
- மஞ்சள்தூள்-1/4 ஸ்பூன்
- உப்பு-1 ஸ்பூன்
- கொத்தமல்லி-சிறிது
- எண்ணெய் - 4 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் டபுள் பீன்ஸ் 5 மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.
- பின் அதை ஒரு குக்கரில் டபுள் பீன்ஸ்,1/4 ஸ்பூன் உப்பு,தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும்.
- கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,சோம்பு,சீரகம் சேர்த்து வதக்கவும்.
- பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், சிறிதாக நறுக்கிய இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள்,தனியாதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிளகாய்த்தூள் வாசனை போக்கும் வரை சிறு தீயில் வதக்கவும்.
- பின் அடுப்பை அணைத்து மசாலாவை ஆறவிடவும்.
- ஆறியதும் மிக்ஸ்யில் சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கிவைத்த மசாலாவை நன்றாக அரைக்கவும்.
- பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைத்துவைத்த மசாலாவை சேர்த்து 1 கப் தண்ணீர்,வேகவைத்த டபுள் பீன்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 10 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி கிளறி சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.
குறிப்பு :
கிரேவி இன்னும் சுவையாக இருக்க 10 முந்தரி பருப்பு வறுத்து அரைக்கும் மசாலாவில் சேர்க்கலாம்.
0 comments:
Post a Comment