skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- எலுமிச்சை பழம் - 2
- சாதம் - 2 கப்
- காய்ந்த மிளகாய் - 4
- கடலை பருப்பு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
- வேர்க்கடலை - 1ஸ்பூன்
- கடுகு - 1/2ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறியது
- எண்ணெய் - 3ஸ்பூன்
- உப்பு - 1ஸ்பூன்
செய்முறை :
- முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வேர்க்கடலை,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
- பின்பு அதில் எலுமிச்சை சாறு , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்ததும் ஆறிய சாதத்தை போட்டு கிளறவும்.
- உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
0 comments:
Post a Comment