தேவையான பொருட்கள் :
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- இஞ்சி - சிறிது
- க.மிளகாய் - 2
- பச்சை மிளகாய் - 2
- பெருங்காயம் - சிறிது
- கடலைபருப்பு - 1/2 கப்
- எண்ணெய்- 3 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/4 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடலை பருப்பு, க.மிளகாய் , பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் எடுத்து அரைத்து வைத்த சட்னியில் சேர்க்கவும்.
- சுவையான கடலைபருப்பு சட்னி ரெடி.சப்பாத்தி , இட்லி , தோசையுடன் பரிமாறவும்.
- புளிப்பாக இருக்கவேண்டும் என்றால் சிறிது புளி வைத்து அரைத்து கொள்ளவும் .
0 comments:
Post a Comment