தேவையான பொருட்கள் :
- தக்காளி - 1
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- மிளகு - 1/2ஸ்பூன்
- பூண்டு - 3
- கடுகு - 1/4ஸ்பூன்
- க.மிளகாய் -2
- கருவேப்பில்லை -சிறிது
- கொத்தமல்லி - சிறிது
- புளி கரைசல் - 1/4 கப்
- உப்பு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
- பெருங்காய தூள் - சிறிது
- எண்ணெய்-1 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் சீரகம், மிளகு, பூண்டு மிக்ஸ்யில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், க.மிளகாய், கருவேப்பில்லை, அரைத்து வைத்ததை போட்டு வதக்கவும்.
- பின் அதில் புளி கரைசல், மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து கொதிவரும் வரை காத்திருக்கவும்.
- கொதிவரும் நிலையில் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
குறிப்பு : ரசத்தை அதிகம் கொதிக்க விடகூடாது.
0 comments:
Post a Comment