ப்ராக்கலி காய் ஒரு முட்டை கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. பார்க்க பச்சை காலிப்ளவர் போல இருக்கும். ப்ராக்கலி வைட்டமின் C மற்றும் நார்சத்து உள்ள காய். ப்ராக்கலி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கொண்டது.
தேவையான பொருட்கள் :
செய்முறை :
குறிப்பு :
சிறுபருப்பு microwave வில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
- ப்ராக்கலி - 1 கப்
- காய்ந்த மிளகாய் -2
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2ஸ்பூன்
- சீரகம் - 1/4 ஸ்பூன்
- வெங்காயம் -1
- பூண்டு - 2 பல்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- சிறு பருப்பு - 1 /4 கப்
- தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
- எண்ணெய்- 1 ஸ்பூன்
- உப்பு - 1 /2 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில் சிறு பருப்பு ,தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்
- கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் ப்ராக்கலி,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பாதி வெந்ததும் வேகவைத்த தண்ணீர் நீக்கிய சிறுபருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி 2 நிமிடம் வேகவிடவும்.
குறிப்பு :
சிறுபருப்பு microwave வில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கலாம்.
0 comments:
Post a Comment