தேவையான பொருட்கள் :
- மிளகு - 2 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- தனியா - 1ஸ்பூன்
- கா .மிளகாய் - 2
- புளி -சிறிது
- பெருங்காய தூள் - சிறிது
- சின்ன வெங்காயம் - 7
- பூண்டு - 5 பல்
- கருவேப்பிலை -சிறிது
- நல்லெண்ணெய் - 7 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உப்பு -1 ஸ்பூன்
- சிறிது எண்ணெயில் மிளகு, சீரகம், தனியா, கா.மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.
- சூடு ஆறியதும் அரைத்து வைத்து கொள்ளவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு , கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் அதில் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கி அதில் கரைத்து வைத்த புளி,உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும்.
0 comments:
Post a Comment