- பாலக் கீரை - 2 கப்
- பனீர் - 100 கிராம்
- பால் - 1/2 கப் அல்லது கிரீம்-1 /4 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 /2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1 /4ஸ்பூன்
- மிளகாய் தூள் -1 ஸ்பூன்
- தனியா தூள் -1 /2 ஸ்பூன்
- சீரகம் -1 /4ஸ்பூன்
- பட்டை , கிராம்பு- 2
- கஸ்துரி மேத்தி -1 /2ஸ்பூன்
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- பட்டர் - 2 ஸ்பூன்
- உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
- ஒரு பாத்திரத்தில்தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் 2 - 3 நிமிடங்கள் பாலக் கீரை வேக வைத்து கொள்ளவும். பின்னர் ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை போட்டு வறுத்து கொள்ளவும் அல்லது பனீர் துண்டுகளை அப்படியே போடலாம்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பட்டர் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு ,சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், பின் தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், தனியாதூள், உப்பு போட்டு அரைத்து வைத்த பாலக் கீரை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 5 நிமிடம் பின் அதில் பனீர், பால் அல்லது கிரீம் ,கஸ்துரி மேத்தி சேர்த்து கொதிக்க விடவும். சாப்பாத்தியுடன் பரிமாறவும் .
0 comments:
Post a Comment