Pages

பால் கொழுக்கட்டை


தேவையான பொருட்கள் :

  1. அரிசிமாவு - 1 கப்
  2. தேங்காய்பால் -1 கப்
  3. பால் - 1/2 கப்
  4. சக்கரை -1/2 கப்
  5. ஏலக்காய்பொடி-1/4 ஸ்பூன்
  6. எண்ணெய் -3 ஸ்பூன்
  7. நெய் -1 ஸ்பூன்
  8. உப்பு - சிறிது

செய்முறை :

  1. முதலில் பாத்திரத்தில் 1/2 கப் பால், 1 1/2 கப் தண்ணீர் , நெய் , உப்பு அனைத்தையும் அரிசிமாவுடன் சேர்க்கவும்.
  2. இதை மிதமான சூட்டில் அடுப்பை வைத்து கட்டி படாமல் கிளறவும்.
  3. உருண்டை பிடிக்கும் பதத்தில் வந்ததும் அடுப்பை அனைத்து அந்த கலவையை ஆறவிடவும்.
  4. ஆறியதும் எண்ணெய் உற்றி நன்றாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக ஆக்கிக்கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் அந்த உருண்டைகளும் மூன்றாவதாக எடுத்த தேங்காய் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. கொதிக்கும் போது அந்த உருண்டைகள் மேலே வரும்போது, இரண்டாவதாக எடுத்த தேங்காய்பாலை உற்றி 4 நிமிடம் கொதிக்கவிடவும்.
  7. பின் முதலாவதாக எடுத்த தேங்காய்பால், சக்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
  8. 8 நிமிடம் கொதித்ததும் சுவையான பால் கொழுக்கட்டை ரெடி.

குறிப்பு :

  1. தேங்காய் பால் எடுக்கும் போது 1 கப் தண்ணீர் சேர்த்து எடுக்கவும். முதல் முறை, இரண்டாம் முறை, மூன்றாவது முறை எடுக்கும் பாலை தனி தனியாக வைத்து கொள்ளவும்.ஒவ்வொரு பாலாக சேர்க்க வசதியாக இருக்கும்.

0 comments:

Post a Comment