தேவையான பொருட்கள் :
செய்முறை:
- வெங்காயம் - 1
- தக்காளி -1
- பச்சைமிளகாய்- 1
- பூண்டு - 2 பல்
- கருவேப்பிலை- சிறிது
- உருளைக்கிழங்கு- 2
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- சீரகம் -1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- தனியாதூள் - 1/2 ஸ்பூன்
- உப்பு -1 ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிது
- தேங்காய் துருவல் -1/2 கப்
செய்முறை:
- கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் , கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் தோல் நீக்கி சிறிய cube வடிவில் வெட்டி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 2 நிமிடம் வதக்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாதூள் , உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின் அதில் 1 கப் தண்ணீர் உற்றி உருளைகிழங்கை வேக விடவும்.
- உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் அரைத்து வைத்த தேங்காய் சேர்த்து கொதிக்கவிடவும்.
- உருளைக்கிழங்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
குறிப்பு :
பொரிச்ச குழம்பில் உருளைக்கிழங்கு பதில் கத்திரிக்காய்,முருங்கைக்காய் அல்லது வாழைக்காய் சேர்த்தும் சமைக்கலாம்.
0 comments:
Post a Comment