தேவையான பொருட்கள் :
- ப்ரெட் துண்டுகள் - 4
- முட்டை - 2
- பால் - 1/2 கப்
- வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்
- தேன் -3 ஸ்பூன்
- வெண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
- முட்டைகளை நன்கு அடித்து, அதனுடன் பால், தேன் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், ப்ரெட் துண்டை கலந்து வைத்துள்ள கலவையில் இரு பக்கங்களையும் தோய்த்து எடுக்கவும்.
- தவாவில் வெண்ணெய் தடவி, ப்ரெட் துண்டை போட்டு டோஸ்ட் செய்யவும்.
- சிவந்ததும் மறு புறமும் டோஸ்ட் செய்து கொள்ளவும்.
குறிப்பு :
ப்ரெட்அதிக நேரம் Dip பண்ணகூடாது, ப்ரெட் ஊறிவிடும்.ஃப்ரெஞ்சு டோஸ்ட்பண்ணும் போது ப்ரெட்தேவையான வடிவில் கட் செய்யவும். தேனுக்கு பதில் சர்க்கரையும் பயன்படுத்தலாம்.