skip to main |
skip to sidebar
தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 250 கிராம்
- சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
- தக்காளிசாஸ் - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- மிளகு - 1/2 ஸ்பூன்
- கேசரி கலர் -சிறிதளவு
- எண்ணெய் - 4 ஸ்பூன்
- உப்பு - 2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
- 2 நிமிடம் கழித்து அதனுடன் சோயாசாஸ்,தக்காளிசாஸ்,மிளகாய் தூள், மஞ்சள்தூள்,இஞ்சிபூண்டு விழுது,கரம் மசாலா,கேசரி கலர், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.
- சிக்கன் பாதி வெந்ததும் திறந்து கிளறவும், அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி கொண்டு இருக்கவும்.
- தண்ணீர் வற்றியதும் அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். சுவையான ஈசி சிக்கன் வறுவல் தயார். பிரியாணி, சாம்பார் சாதத்துடன் அருமையாக இருக்கும்.
2 comments:
Super Priya... Unga samayal fan aitaen.... :)
Thanks ma....
Post a Comment