Pages

ஈசி சிக்கன் வறுவல்



தேவையான பொருட்கள் :
  1. சிக்கன் - 250 கிராம்
  2. சோயாசாஸ் - 1/2 ஸ்பூன்
  3. தக்காளிசாஸ் - 1 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  7. கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
  8. மிளகு - 1/2 ஸ்பூன்
  9. கேசரி கலர் -சிறிதளவு
  10. எண்ணெய் - 4 ஸ்பூன்
  11. உப்பு - 2 ஸ்பூன்

    செய்முறை :

    1. முதலில் எண்ணெய் காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
    2. 2 நிமிடம் கழித்து அதனுடன் சோயாசாஸ்,தக்காளிசாஸ்,மிளகாய் தூள், மஞ்சள்தூள்,இஞ்சிபூண்டு விழுது,கரம் மசாலா,கேசரி கலர், உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடிபோட்டு வேகவிடவும்.
    3. சிக்கன் பாதி வெந்ததும் திறந்து கிளறவும், அதில் உள்ள தண்ணீர் வற்றும் வரை நன்கு கிளறி கொண்டு இருக்கவும்.
    4. தண்ணீர் வற்றியதும் அதனுடன் மிளகு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும். சுவையான ஈசி சிக்கன் வறுவல் தயார். பிரியாணி, சாம்பார் சாதத்துடன் அருமையாக இருக்கும்.

    2 comments:

    Gayathri said...

    Super Priya... Unga samayal fan aitaen.... :)

    Priya said...

    Thanks ma....

    Post a Comment