அவகாடோ(Butter fruit) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B6 உள்ளன. அவகாடோ கெட்டகொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்றவை தடுக்க இயலும்.
தேவையான பொருட்கள் :
தாளிக்க :
செய்முறை :
தேவையான பொருட்கள் :
- அவகாடோ - 1
- இஞ்சி - சிறிது
- பச்சை மிளகாய் - 3
- லெமன்ஜூஸ் - 1 / 2 ஸ்பூன்
- வெங்காயம் - 1
- உப்பு - 1 / 2 ஸ்பூன்
- கொத்தமல்லி - 1/2 கப்
தாளிக்க :
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிது
செய்முறை :
- பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் கொத்தமல்லி, அவகாடோ சேர்த்து வதக்கவும்.
- வதங்கியதும் சூடாறியதும் லெமன்ஜூஸ், உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சட்னியுடன் சேர்த்து கலக்கி சப்பாத்தி, தோசை, இட்லியுடன் பரிமாறவும்.
குறிப்பு :
அவகாடோவை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி ஒரு ஸ்பூன் கொண்டு உள்ளிருக்கும் காயை எடுக்கவும்.
2 comments:
avakodavai appadiye pottu vathakkunuma? vetta vendama, tholai seeva vendama
அவகாடோவை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி ஒரு ஸ்பூன் கொண்டு உள்ளிருக்கும் காயை எடுக்கவும்.
Post a Comment