Pages

அவகாடோ சட்னி

             அவகாடோ(Butter fruit) பொட்டாசியம், மற்றும் வைட்டமின் சி, கே, ஃபோலேட் மற்றும் B6 உள்ளன. அவகாடோ கெட்டகொழுப்பை குறைக்கும் திறன் கொண்டதால் Heart attack, High cholesterol போன்றவை தடுக்க இயலும். 


 
தேவையான பொருட்கள் :

  1. அவகாடோ - 1
  2. இஞ்சி - சிறிது
  3. பச்சை மிளகாய் - 3
  4. லெமன்ஜூஸ் - 1 / 2 ஸ்பூன்
  5. வெங்காயம் - 1
  6. உப்பு - 1 / 2 ஸ்பூன்
  7. கொத்தமல்லி - 1/2 கப்

தாளிக்க

  1. எண்ணெய் - 1 ஸ்பூன்
  2. கடுகு - 1/4 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  4. கருவேப்பிலை - சிறிது

செய்முறை

  1. பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  2. வதங்கியதும் கொத்தமல்லி, அவகாடோ சேர்த்து வதக்கவும்.
  3. வதங்கியதும் சூடாறியதும் லெமன்ஜூஸ், உப்பு சேர்த்து மிக்ஸ்யில் அரைத்து கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி சூடானதும் கடுகு, உள்ளுதம்பருப்பு, கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் சட்னியுடன் சேர்த்து கலக்கி சப்பாத்தி, தோசை, இட்லியுடன் பரிமாறவும்.

குறிப்பு :

அவகாடோவை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி ஒரு ஸ்பூன் கொண்டு உள்ளிருக்கும் காயை எடுக்கவும். 

2 comments:

manoharan said...

avakodavai appadiye pottu vathakkunuma? vetta vendama, tholai seeva vendama

Priya said...

அவகாடோவை பாதியாக வெட்டி உள்ளே இருக்கும் கொட்டை நீக்கி ஒரு ஸ்பூன் கொண்டு உள்ளிருக்கும் காயை எடுக்கவும்.

Post a Comment